எழும்பூர் ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணி அனந்தபுரி, உழவன், சேது எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும்
சென்னை, நவ.9-
எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக அனந்தபுரி, உழவன், சேது எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* தஞ்சாவூரில் இருந்து நாளை (திங்கட்கிழமை) முதல் 29-ந்தேதி வரையில் இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16866), மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். தாம்பரம்-எழும்பூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டதால், தாம்பரத்தில் நிறுத்தப்படும்.
* கொல்லத்தில் இருந்து நாளை (திங்கட்கிழமை) முதல் 29-ந்தேதி வரையில் மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20636), மறுநாள் காலை 5.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும். தாம்பரம்-எழும்பூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டதால், தாம்பரத்தில் நிறுத்தப்படும்.
* ராமேசுவரத்தில் இருந்து நாளை (திங்கட்கிழமை) முதல் 29-ந்தேதி வரையில் இரவு 8.50 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் (22662), மறுநாள் காலை 6.35 மணிக்கு தாம்பரம் வந்தடையும். தாம்பரம்-எழும்பூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டதால், தாம்பரத்தில் நிறுத்தப்படும்.
* ராமேசுவரத்தில் இருந்து நாளை (திங்கட்கிழமை) முதல் 29-ந்தேதி வரையில் மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16752), மறுநாள் காலை 6.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். தாம்பரம்-எழும்பூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டதால், தாம்பரத்தில் நிறுத்தப்படும்.
புறப்படும் இடம் மாற்றம்
* சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் (16865), அதற்கு மாற்றாகவருகிற 11-ந்தேதி முதல் 30-ந் தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர் செல்லும்.
* சென்னை எழும்பூரில் இருந்து இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (20635), வருகிற 11-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து இரவு 8.20 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும்.
* சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரெயில் (22661), வருகிற 11-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும்.
* சென்னை எழும்பூரில் இருந்த இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் எகஸ்பிரஸ் ரெயில் (16751), தாம்பரத்தில் இருந்த 7.42 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும்.
* சென்னை எழும்பூரில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22158), வருகிற 11-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில் சென்னை கடற்கரையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும்.
* சென்னை எழும்பூர்-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16127/16128) மறு அறிவிப்பு வரும் வரையில், ஏற்கனவே உள்ளதுபோல தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.