எஸ்ஐஆர்: சென்னையில் நவ. 25 வரை வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும்
Nov 20 2025
25
2026 பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருவதையொட்டி, வாக்காளர்களின் சந்தேகங்களைத் தீர்க்கச் சென்னையில் செவ்வாயன்று (நவ.18) முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரை வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் அறிவித்துள்ளார். மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள 947 வாக்குச்சாவடி மையங்களில் இந்த உதவி மையங்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். இந்த மையங்களில் வாக்காளர்க ளுக்குக் கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். மேலும், வாக்காளர்கள் தங்களது பெயர் 2005-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களையும் சரிபார்க்கலாம். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி களுக்குத் துணையாக ஒருவர் வரலாம். இந்தப் பணிகள் வெற்றிபெற, அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றும், அவர்கள் தினந்தோறும் அதிகபட்சம் 50 நிரப்பப்பட்ட படிவங்களைச் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படுவர் என்றும் மாநகராட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சேப்பாக்கம் சட்ட மன்றத் தொகுதியில் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைச் சரிபார்த்து, வாக்குச்சாவடி அலுவலர் செயலியில் பதிவேற்றம் செய்வது குறித்த பயிற்சியை கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் கௌசிக் ஆய்வு செய்தார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?