ஏமாற்றம் !

ஏமாற்றம் !



முதன் முதலாக தான் ஓட்டுப் போட ப்போகிறோம் என்ற குஷியில் இருந்தாள் லாவண்யா. தன் தோழி 

யர்களிடம் பெருமிதமாக சொல்லிக் 

கொண்டிருந்தாள். தன்னுடைய ஓட் டர் ஐ.டி. கார்டை அடிக்கடி எடுத்து ஆசையோடு தடவிப் பார்த்துக் கொ ண்டிருந்தாள்.


தான் ஓட்டுப் போடப் போகும் அந்தத் 

திருநாளை ஆவலோடும் ஒரு விதப் 

பட படப்போடும் எதிர்பார்த்துக் காக்

க ஆரம்பித்தாள் ! 


ஆனால் அந்தக் கொடுப்பினை லாவண்யாவுக்கு இல்லாமல் போயிற்று. ஏன் அவள் பெற்றோர்க் கும்கூடக் கிடைக்கவில்லை.


தேர்தலுக்கு முன்னாள் கோயம்ப த்தூரில் லாவண்யாவின் சித்தப் பாகூட இருந்துவந்த தாத்தா ( அதா வது லாவண்யாவின் அப்பாவின் அப்பா ) மாரடைப்பால் காலமாகிப் போனதால் அனைவரும் கோயம் பத்தூருக்குச் செல்லவேண்டியநிர்ப் பந்தம் ஏற்பட்டது.


காரியமெல்லாம் முடிந்துதான் அனைவரும் திரும்பினர். பதிமூன்று நாள் ஓடியிருந்தது. இதற்கிடையில் தேர்தலும் நடந்து முடிந்திருந்தது. 


லாவண்யா முகத்தில் இன்னும் அப்பட்டமான சோகம் குடி கொண் டிருக்க அவளின் அப்பாவுக்கு ஆச்ச ரியத்திற்கு மேல் ஆச்சரியம் !


 " லாவண் ! விடும்மா. தாத்தாவுக்கு வயசாகிப் போச்சு. போய்ச் சேர்ந்து ட்டார்.அதுக்காக ஏம்மா இப்படி மூஞ்சியை தூக்கி வச்சிக்கிட்டி ருக்கே ?” என்று கேட்க அதற்கு 


" நீங்க வேற... அவ அதுக்காக ஒண் ணும் மூஞ்சியத் தூக்கி வச்சிக் கல்ல…” 


“ பின் என்னவாம் ?” 


“நடந்து முடிந்த தேர்தலில் தான் முதன் முதலில் ஓட்டு போட முடியா மப்போச் சேன்னு ஏக்கத்துல மூஞ்சி யைத் தூக்கி வச்சிக்கிட்டிருக்கா !" 


அப்பா தலையில் அடித்துக்கொள்ள,

பதில் சொன்ன அம்மாவை சுட்டெரி ப்பது போல் பார்த்தாள் லாவண்யா.

                ....................................


வி.கே.லக்ஷ்மிநாராயணன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%