ஒடிசா கல் குவாரியில் வெடிவிபத்தில் இருவர் பலி! மேலும் சிலர் சிக்கியிருக்க வாய்ப்பு!

ஒடிசா கல் குவாரியில் வெடிவிபத்தில் இருவர் பலி! மேலும் சிலர் சிக்கியிருக்க வாய்ப்பு!


 

ஒடிசாவில் சட்டவிரோத கல்குவாரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் பலியாகினர்; மேலும் சிலர் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஒடிசாவின் தேன்கனல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த கல் குவாரியில், சனிக்கிழமை இரவில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் உடனடியாக விரைந்து, விபத்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.


விபத்து ஏற்பட்ட குவாரியில் குப்பைகள் சிதறிக் கிடந்ததாகவும், பெரிய பாறைகள் சரிந்து விழுந்தும் இருந்தன. இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை என்றாலும், இருவர் பலி என்று கூறப்படுகிறது.


இரவு நேரத்தில் விபத்து ஏற்பட்டிருப்பதால், இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் சிக்கியிருக்கும் அபாயமும் உள்ளதாகக் காவல் அதிகாரிகள் கூறினர். மேலும், விபத்து ஏற்பட்ட நேரத்தில் சம்பவ இடத்தில் இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களும் தெளிவாக இல்லை என்று கூறினர்.


பெரியளவிலான கற்கள் விழுந்திருப்பதால், அவற்றை அகற்றுவதும் கடினம் என்பதால், கனரக வாகனங்களும் மோப்ப நாய்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%