" அன்னமிட்டு
பிறர் வயிறு
நிறையக் கண்டு
மகிழ்வதில் ஒரு
இன்பம் ... "
போதும் என்று
சொல்வது
சாப்பாட்டில்
மட்டும் தான் ....."
முதல் தேவை
பசி பட்டினி
இல்லாமல்
தீர்ப்பது தான் .... "
அதிலும் பசி
என்று துடிக்கும்
நபருக்கு உணவு
கொடுத்து வயிறு
நிறைந்து மனம்
மலர்வதில் வரும்
ஆனந்தம் ..."
எங்கு சென்றாலும்
உணவு உண்டு
அது காலை
மாலை இரவு
என இருக்கக்
வேண்டும் .... "
பசிக் கொடுமை
கூடாது அது போல
இருப்பவன் வந்து
சிக்கனத்திற்காக
நிற்கக் கூடாது ..."
பசி இல்லாத
மனிதன் இருக்கும்
நாடு தான்
வல்லரசு நாடு ..."
பசி பினி
இல்லாத நாடு
புனித இடம்
சொர்க்க பூமி ...."
தினமும் ஒருவருக்காவது
அன்னமிட்டு
பசி போக்குவோம்
மனிதம் போற்றுவோம் .... "
- சீர்காழி .ஆர். சீதாராமன் .
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?