" மாமா..."
ஈ.ஸி.சேரில் கண் மூடி சாய்ந்தி
ருந்த சாரங்கன் குரல் கேட்டு கண் திறந்து பார்த்தார்.
எதிர்வீட்டு சடகோபன் நின்றுகொண் டிருப்பது தெரிந்தது.
சடகோபன் தொடர்ந்து பேசினார். " மாமா ! தீபாவளி வாழ்த்துகள் . கங்காஸ்னானம் ஆச்சா ?"
விறைப்புடன் நிமிர்ந்து உட்கார்ந்த சாரங்கன் " தீபாவளி வாழ்த்துகள் சரி. அதென்ன கங்காஸ்னானம் ஆச்சான்னு கேள்வி ?"
கிழவர் எடக்கு மடக்காக பேச ஆரம்பி த்தது தெரிந்தது. உஷாராக டீல் பண்ண வேண்டும் என்ற எண்ணம் சடகோபன் மனதில் எழுந்தது.
" அதில்ல மாமா ! ஃபார்மாலிடிக்காக எல்லாரும்கேட்பாளோன்னோ...அதுமாதிரி கேட்டேன்.."
" அது சரி. இங்க சென்னையில கங்கையா ஓடறதுது! கூவம்னா ஓடறது ! கூவம் ஸ்னானம்ஆச்சா ன்னு கேக்கவேண்டியதுதானே! இப்
படித்தான் தப்பு தப்பா பேசவேண் டியது. அப்புறமாக ஃபார்மாலிடின்னு சொல்ல வேண்டியது..."
சடகோபனுக்கு வேர்த்துக் கொட்டி
யது. மலங்க மலங்க விழித்தார்.
சாரங்கன் தொடர்ந்தார். " ஓய் ! நான் எஸ்.எஸ்.எல்.சி படிக்கற காலத்துல இங்க்லீஷ் பாடம் நடத்தற வாத்தியார். பேர் நியாபகம் இல்ல. ' If you does not know grammar you Can't write or speak English well ' அப்படீன்னுஆரம்பி ப்பார். இங்க்லீஷ் தெரிஞ்சவா அமுக்கமா சிரிப்பா. தெரியாதவா அதையே
ஃபாலோ பண்ணுவா. ஆனா மனு ஷன் எழுதறபோது சின்ன மிஸ்டேக் கூட செய்யமாட்டார். கடைசி வரை அப்படியேதான்பேசிண்டுருந்தார்...இதுக்கென்ன சொல்றீர் ?"
சரிதான் விட்டால் கி.பி.யிலிருந்து கி.மு.வுக்கு மனுஷன் போனாலும் போவார். சீக்கிரமே இடத்தை காலி செய்யவேண்டும் என்ற உறுதியான எண்ணம் சடகோபன் மனத்தில் எழுந்தது.
" ஆசிரியர் பேசினது தப்புதான் மாமா ! அதைப்பற்றி இப்போ எதுக்கு நாம பேசணும்...சரி ரெஸ்ட் எடுங்க. நான் கிளம்பறேன் "
" ஓய் இரும், இப்பவும் நீர் தப்பாத்தான் பேசறீர்."
திடுக்கிட்ட சடகோபன், " மாமா..என்ன
சொல்றீங்க ?" அப்பாவித்தனமாகக்
கேட்டார். விட்டால் அழுதே விடுவார்
போல் இருந்தது.
" இல்ல, தெரியாமத்தான் கேக்க றேன். ரெஸ்ட் எடுக்காம இப்போ நான் ஓடி ண்டா இருக்கேன் !"
"சாரி மாமா ! தப்புதான். மன்னிச்சி டுங்க!" இருகரம் குவித்து வணங்கி னார்.
சடகோபனை கூர்ந்து பார்த்த சாரங்கன், " இது ஆத்மார்த்தமான பேச்சுதானே ! உதட்டளவிலேர்ந்து வரல்லயே ?" என கேட்க
" சத்தியமான வார்த்தை! என்னை மன்னிச்சிடுங்க ! " என கூறிவிட்டு திரும்பிப் பார்க்காமல் விரைவாக
வேளியேறினார் . அப்போது பக்க
த்து வீட்டு ரங்கன், " என்ன, சடகோ
பன் ! கங்கா ஸ்னானம் ஆச்சா ?"
என்று கேட்க, ' அய்யய்யோ ! மறு
படியுமா..' என்று கலங்கி தலை
தெறிக்க ஓடினார் சடகோபன்.

-வி.கே.லக்ஷ்மிநாராயணன்