கங்கையில் 24 லட்சம் பேர் புனித நீராடல்: முதல்-மந்திரி ஆதித்யநாத்

கங்கையில் 24 லட்சம் பேர் புனித நீராடல்: முதல்-மந்திரி ஆதித்யநாத்


வாரணாசி,


ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்ப மேளாவாகவும், ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்ப மேளாவாகவும் இந்த புனித நீராடல் கொண்டாடப்படும்.


உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் ஒன்று கூடும் இடமே திரிவேணி சங்கமம் என அழைக்கப்படுகிறது. 3 நதிகள் சங்கமிக்கும் இந்த இடத்தில் புனித நீராடுவது என்பது மிக மிக புனிதமானது என்ற மரபு உள்ளது. இது கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது.


இதில் மூழ்கி குளிப்பதன் மூலம் தங்களுடைய முற்பிறவி பாவங்கள் தொலைகின்றன என்று காலம் காலமாக தலைமுறை தலைமுறையாக பக்தர்கள் நம்புகிறார்கள். இதனால் புனித நீராடலை வடமாநிலத்தவர் மிகப்பெரிய கடமையாக கருதுகிறார்கள்.


இந்த ஆண்டு பெருவிழா இன்று பவுர்ணமி தினத்தில் தொடங்கியுள்ளது. இது, ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்ப மேளாவாகவும், ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்ப மேளாவாகவும் கொண்டாடப்படும்.


இந்நிலையில், பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதுபற்றி உத்தர பிரதேச முதல்-மந்திரி ஆதித்யநாத் அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தியில், வாரணாசியில் கங்கை ஆற்றின் பல்வேறு பகுதிகளிலும் 10 லட்சம் பக்தர்களும், அயோத்தியில் 5.5 லட்சம் பக்தர்களும், மதுராவில் 2.5 லட்சம் பக்தர்களும் புனித நீராடினர். இன்று மாலை வரை மொத்தம் 24 லட்சம் பேர் புனித நீராடியுள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.


---------

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%