தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
மஷ்ரூம் (காளான்)அரை கிலோ
பெரிய வெங்காயம்2
தக்காளி1
இஞ்சி பூண்டு விழுது2 டீஸ்பூன்
மிளகாய் தூள் முக்கால் டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள்2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா தூள்2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள்கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் 3
கொத்தமல்லிகைப்பிடி
வெங்காய் தாள்கைப்பிடி
உப்பு, எண்ணெய்தேவைக்கேற்ப
செய்முறை :
வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கொத்தமல்லி மற்றும் வெங்காய தாளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். காளானை கழுவி நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாயை போட்டு வதக்கவும். சிறிது வதங்கியதும் தக்காளியை போட்டு நன்கு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பின்பு காளானை போட்டு வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
காளான் சிறிது வதங்கியதும் கரம் மாசலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின்பு தேவையான அளவு நீர் விட்டு மேலே கொத்தமல்லி தூவி காளான் வேகும் வரை கொதிக்க விட்டு கிரேவி போல் வரும் வரை விடவும்.
இன்னொரு வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி அடுக்கடுக்காக பிரித்தெடுத்து கொள்ளவும். மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு கண்ணாடி போல் ஆகும் வரை வதக்கவும். வதக்கிய வெங்காயத்தை காளான் கிரேவியில் கொட்டி கிளறி பின் பொடியாக நறுக்கிய வெங்காய தாளை மேலே தூவி இறக்கவும். சுவையான கடாய் மஷ்ரூம் தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : பரோட்டா, சப்பாத்தி, நாண் உடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
நுரை பீர்க்கங்காய் கடையல்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
நுரை பீர்க்கங்காய் 2
சின்ன வெங்காயம் 10
காய்ந்த மிளகாய் 4
புளி நெல்லிக்காய் அளவு
தக்காளி 1
கறிவேப்பிலை 1 கொத்து
மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்
கடுகு1 டீஸ்பூன்
எண்ணெய் தேவைக்கேற்ப
உப்பு தேவைக்கேற்ப
பீர்க்கங்காய், சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு போட்டு பொரிந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.
பின் காயை போட்டு வதக்கவும். பிறகு மஞ்சள் தூள் உப்பு சேர்க்கவும். அரை வேக்காடு வெந்ததும் தக்காளி சேர்த்து வேக விடவும். காய் வெந்ததும் ஊற வைத்த நெல்லிக்காய் அளவு புளியை அதில் சேர்த்து கடையவும்.
தேவைப்பட்டால் கொத்தமல்லி தழை சேர்க்கலாம். இப்போது சூடான நுரை பீர்க்கங்காய் கடையல் தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை சாதத்துடன் வைத்து சாப்பிடலாம். தோசைக்கு வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
நுரை பீக்கங்காய் பொரியல்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
நுரை பீக்காங்காய்2
வெங்காயம் 2
பூண்டு பல்2
காய்ந்த மிளகாய்4
கறிவேப்பிலை2 கொத்து
தக்காளி1
தேங்காய் துருவல்கால் கப்
கரம் மசாலா1 டேபிள் ஸ்பூன்
சீரகம்1 டீஸ்பூன்
கொத்த மல்லி1 கைப்பிடி
மிளகாய்தூள் அரை டேபிள் ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை :
பீர்க்கங்காய், பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு பொரிந்ததும் பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு காயை போட்டு வதக்கவும்.
வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு கரம் மசாலா, மிளகாய்தூள் சேர்த்து பின் உப்பு சேர்க்கவும். காய் வெந்ததும் கொத்தமல்லி மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : தயிர் சாதம், எலுமிச்சை சாதம், ரச சாதம், மற்றும் சாம்பார் சாதத்துடனும் வைத்து சாப்பிடலாம்.
பலாக்காய் மசாலா
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
பலாக்காய்அரை கிலோ
சிறிய வெங்காயம்10
தக்காளி2
தேங்காய் துருவல்அரை கப்
பூண்டு பல்10
இஞ்சி விழுது1 டீஸ்பூன்
சீரகம்1 டீஸ்பூன்
சோம்பு1 டீஸ்பூன்
கசகசா1 டீஸ்பூன்
எண்ணெய்தேவைக்கேற்ப
உப்பு தேவைக்கேற்ப
தாளிக்க
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 6
செய்முறை :
பலாக்காயின் தோலை சீவி பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதை மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரை வேக்கடாக அவித்து, தண்ணீரை இறுத்து விடவும்.
தக்காளியையும், வெங்காயத்தையும் நறுக்கிக் கொண்டு, பூண்டை உரித்துக் கொள்ளவும்.
தேங்காய் துருவல், மிளகாய் வற்றல், இஞ்சி, சீரகம், சோம்பு, கசகசா ஆகியவற்றை ஒன்றாக மழுமழுப்பாக அரைத்து மசாலாவாக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும், தாளிப்புப் பொருள்களை (கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், சோம்பு) அதில் போட்டுத் தாளித்துக் கொண்டு, தக்காளி, வெங்காயத் துண்டுகளையும், பூண்டையும் போட்டு வதக்கவும்.
அரைத்து வைத்திருக்கும் மசாலாப் பொருள்களை அந்த வதக்கலுடன் சேர்த்து, மேலும் சில நிமிடங்கள் வதக்கவும்.
அதில் அரை வேக்கடாகாவுள்ள பலாக்காய்த் துண்டுகளைப் போட்டு, அளவான தண்ணீர் விட்டு, உப்புப் போட்டுக் கிளறி விடுங்கள். தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.
பலாக்காய் சுண்டல் மசாலா
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
பலாக்காய் கால் கிலோ
கருப்பு கொண்டைக்கடலை அரை கப்
சிறிய வெங்காயம் 10 அல்லது 15
தேங்காய் துருவல்கால் கப்
மிளகாய் தூள் கால் டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா கால் டேபிள் ஸ்பூன்
புளி எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
தாளிக்க
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய் எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
கருப்பு கொண்டைக்கடலையை வேக வைத்துக் கொள்ளவும்.
சிறிய வெங்காயத்தை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் பலா துண்டுகளுடன் புளி, மஞ்சள்தூள் கலந்து ஐந்து விசில் வரும்வரை வேக வைக்கவும். பின்பு ஆற வைத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, வெங்காயத்தை கொட்டி வதக்கவும். அதில் உதிர்த்து வைத்துள்ள பலாக்காய், கொண்டைக்கடலை, மிளகாய்தூள், கரம் மசாலாதூள், உப்பு, தேங்காய் துருவல் போன்ற அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதை ஒரு கப் ஓட்ஸ் கஞ்சியுடன் காலை உணவாக சாப்பிடலாம்.
பலாக்காய் பொரியல்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
பலாக்காய்அரை கிலோ
பெரிய வெங்காயம்1
பச்சை மிளகாய்2
காய்ந்த மிளகாய்3
தேங்காய் துருவல்ஒரு கப்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு1 டீஸ்பூன்
எண்ணெய் தேவைக்கேற்ப
உப்புதேவைக்கேற்ப
செய்முறை :
பலாக்காயை பொடியாக நறுக்கி, வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவிட வேண்டும். தண்ணீரை வடித்துவிட்டு, ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி வேக வைத்த பலாக்காயை கொட்டி கிளற வேண்டும். பின்பு, துருவிய தேங்காயை போட்டு கிளறி இறக்க வேண்டும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இந்த பொரியல் ரச சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
பலாக்காய் கூட்டு
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
பிஞ்சு பலாக்காய் கால் கிலோ
கடலைப்பருப்பு100 கிராம்
மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்
கடுகு1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு1 டீஸ்பூன்
எண்ணெய்தேவைக்கேற்ப
வெங்காயம் 10
உப்புதேவைக்கேற்ப
பெருங்காயத்தூள்2 சிட்டிகை
அரைக்க
தேங்காய் துருவல் - அரை கப்
சீரகம் - அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
செய்முறை :
தேங்காய் துருவல், சீரகம், பச்சைமிளகாய் ஆகியவற்றை மையாக அரைக்கவும்.
கடலைப்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.
பலாக்காயை பொடியாக நறுக்கி உப்பு போட்டு வேகவிட்டு தண்ணீரை வடித்து விடவும்.
பருப்பில் பொடியாக நறுக்கிய வெங்காயம், வேகவைத்த காய், அரைத்த மசாலா ஆகியவற்றை போட்டு வேகவிடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து கொட்டி கொதித்ததும் இறக்கவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : வெறும் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
பலாக்காய் புளிக்குழம்பு
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
பிஞ்சு பலாக்காய் அரை கிலோ
வெங்காயம் 2
பூண்டு பல்6
பச்சை மிளகாய்3
கறிவேப்பிலை ஒரு கொத்து
புளி எலுமிச்சை அளவு
தேங்காய் துருவல்அரை கப்
மிளகாய் தூள்1 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
வறுத்து அரைக்க
தேங்காய் துருவல் - அரை கப்
பூண்டு பல் - 5
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
தாளிக்க
கடுகு - அரை டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
பலாக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். புளியை கெட்டியாகக் கரைத்து வைக்கவும். தேங்காயை அரைத்து தேங்காய்ப் பால் எடுத்துக் கொள்ளவும்.
வறுத்து அரைக்க வேண்டியவற்றை சிவக்க வறுத்து, ஆற வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பலாக்காய் துண்டுகளுடன் தூள் வகைகள், புளிக்கரைசல் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு குலுக்கிவிட்டு உப்பு சரிபார்த்துக் கொள்ளவும். பிறகு அதனை குக்கரில் போட்டு, பாதி தேங்காய்ப் பாலை ஊற்றி 3 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிவக்க வதக்கவும்.
வதங்கியதும் வேக வைத்த பலாக்காயைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வேகவிடவும்.
குழம்பில் எண்ணெய் தௌpந்து வந்ததும், தேங்காய் விழுது மற்றும் மீதமிருக்கும் தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். இப்போது சுவையான பலாக்காய் புளிக்குழம்பு தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : பச்சரிசி சாதம், ரொட்டியுடன் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.
பலாக்காய் குழம்பு
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
பலாக்காய் கால் கிலோ
பெரிய வெங்காயம் 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் 3
தக்காளி 2 (நறுக்கியது)
தேங்காய் துருவல் கால் கப்
சோம்பு 1 டீஸ்பூன்
கசகசா அரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்
சீரகப் பொடி 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் கால் டேபிள் ஸ்பூன்
மாங்காய் தூள் கால் டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
கரம் மசாலா கால் டேபிள் ஸ்பூன்
எண்ணெய் தேவைக்கேற்ப
கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி
செய்முறை :
முதலில் சுத்தம் செய்து நறுக்கி வைத்துள்ள பலாக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, லேசாக தண்ணீர் தௌpத்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின் மிக்ஸியில் தேங்காய், சோம்பு, கசகசா மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள பலாக்காயை போட்டு 5 அல்லது 7 நிமிடம் பொரித்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பின் வெங்காயத்தை போட்டு 2 அல்லது 3 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பிறகு அத்துடன் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை, மிளகாள் தூள், உப்பு, சீரகப் பொடி மற்றும் மாங்காய் தூள் சேர்த்து 3 அல்லது 4 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
பின் அதில் பொரித்து வைத்துள்ள பலாக்காய் மற்றும் கரம் மசாலா சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் 5 அல்லது 7 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லி இலை தூவவும். இப்போது பலாக்காய் குழம்பு தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை வெறும் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
வெள்ளரிக்காய் மோர் கூட்டு
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
வெள்ளரிக்காய் கால் கிலோ
தயிர் 1 கப்
தேங்காய் துருவல் அரை கப்
பச்சை மிளகாய் 2
சீரகம் அரை டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
தாளிக்க:
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
காய்ந்தமிளகாய் - 1
பெருங்காய தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை :
வெள்ளரிக்காயை, தோல், விதை மற்றும் உள்ளிருக்கும் வெள்ளைப் பகுதியை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வெள்ளரிக்காய்த் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, மூடி மிதமானத் தீயில் வேக விடவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. காயிலுள்ள நீர்ச்சத்திலேயே வெந்து விடும். அரை வேக்காடு வெந்தால் போதும். குழைய விடக்கூடாது.
இதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது மற்றும் உப்பு சேர்த்து, இலேசாகக் கிளறி விட்டு, ஓரிரு வினாடிகள் அடுப்பில் வைத்திருந்து, சற்று கொதித்தவுடன், கீழே இறக்கி வைக்கவும். கூட்டு சற்று ஆறியதும், அதில் தயிரை நன்றாகக் கடைந்து சேர்த்துக் கலக்கவும்.
பின்னர் அதில், கடுகு, வெந்தயம், பெருங்காயம், மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்துக் கொட்டவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : காரமான குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு: இந்தக் கூட்டை, சுரைக்காய், வெள்ளைப் பூசணிக்காய் ஆகியவற்றை உபயோகித்தும் செய்யலாம்.
வெள்ளரிக்காய் கூட்டு
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
வெள்ளரிக்காய் கால் கிலோ
பயத்தம் பருப்பு 200 கிராம்
சாம்பார் பொடி 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மினகாய் 2
மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
தாளிக்க :
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
சின்ன வெங்காயம் - 2
செய்முறை :
வெள்ளரிக்காயின் தோலை சீவி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பயத்தம் பருப்புடன் மஞ்சள்தூள், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். (ஒரு அளவிற்கு வேக வைத்தால் போதும். குழைய விடக் கூடாது).
பருப்பு வெந்தவுடன், அதில் நறுக்கிய வெள்ளரிக்காய் துண்டுகளை போட்டு அத்துடன் சாம்பார் பொடி, உப்பு சேர்த்து 2 அல்லது 3 நிமிடங்கள் வேக விடவும்.
பின்னர் கடுகு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்துக் கொட்டவும். சுவையான வெள்ளரிக்காய் கூட்டு ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : காரக்குழம்பு, வத்தல் குழம்பு போன்றவற்றுடன் தொட்டுக் கொள்ள நன்றாயிருக்கும். சூடான சாதத்துடனும் கலந்து சாப்பிடலாம்.
Thanks and regards
A s Govinda rajan
Kodambakkam Chennai