கட்சி மேலிடம் தீர்மானித்தால் 5 ஆண்டுகளும் நானே முதல்-மந்திரி -சித்தராமையா
Oct 29 2025
18
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் அமைந்து 2½ ஆண்டுகள் ஆகிறது. 30 மாதங்களுக்கு பிறகு சித்தராமையா முதல்-மந்திரி பதவியை துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக பேசப்படுகிறது.
இந்த நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா நேற்று மங்களூருவுக்கு சென்றார். அங்கு அவரிடம், நிருபர்கள், நீங்களே 5 ஆண்டுகளும் முதல்-மந்திரியாக நீடிப்பீர்களா? என்று கேள்வி கேட்டனர். அதற்கு சட்டென பதிலளித்த சித்தராமையா, கட்சி மேலிடம் தீர்மானித்தால் 5 ஆண்டுகளும் நானே முதல்-மந்திரியாக இருப்பேன் என்று கூறினார். இதற்கு முன்பு, நானே 5 ஆண்டுகளுக்கும் முதல்-மந்திரியாக இருப்பேன் என சித்தராமையா கூறி வந்தார். இந்த நிலையில் முதன்முறையாக அவர், கட்சி மேலிடம் தீர்மானித்தால் 5 ஆண்டுகளுக்கும் நானே முதல்-மந்திரி என கூறியுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?