கண்காணிப்புக் குழுவில் இருந்த பெண்ணை கொலை செய்த அமெரிக்க காவலர்
மனித உரிமை அமைப்புகள் போராட்டம்
மின்னியாபோலிஸ்,ஜன.10- அமெரிக்காவின் மின்னசோட்டா (Minnesota) மாகாணத்தில், அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரி ஒருவர் சமூக ஆர்வலரை சுட்டுப் படுகொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து அமெரிக்காவில் மனித உரிமை அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. டிரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு அமெரிக்காவில் உள்ள வெளி நாட்டினரை வெளியேற்றி வருகிறார். தற்போது போதிய ஆவணங்கள் இல்லாத நபர்களை வெளியேற்றி வரு கிறது. இதற்காக குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத்துறைக்கு பல கோடி பண மும் ஒதுக்கியுள்ளது. இந்த தேடுதல் பணி யின் போது காவல்துறை அதிகாரிகள் மிக மோசமாக நடந்து வன்முறையை தூண்டி வருகின்றனர். இதனால் அந் நாட்டின் பல மாநிலங்களில் மோதல்க ளும் வன்முறைகளும் வெடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மின்ன சோட்டா மாகாணத்தில் உள்ள மின்னி யாபோலிஸ் நகரில் கடந்த புதன்கிழமை, டிரம்ப் உத்தரவின் பேரில், குடியேற்ற வாசிகளை வெளியேற்றும் நோக்கில் சுமார் 2,000 அதிகாரிகள் அனுப்பப்பட்ட னர். அந்தக் குழுவுடன் கண்காணிப்பு குழுவும் சென்றுள்ளது. அக்கண்கா ணிப்பு குழுவில் மூன்று குழந்தைகளு க்குத் தாயான ரெனி குட் என்ற பெண் ணும் இருந்தார். இப்பெண்ணை குடி யேற்ற மற்றும் சுங்க அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்தது நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் வெடித்து வருகிறது. ரெனி குட் தனது காரை திருப்ப முயன்றபோது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட காணொலி வெளியாகியுள்ளது. அதனை காட்டி ரெனி குட் தனது காரால் அதிகாரியை மோதி கொல்ல முயன்றார். இது “உள்நாட்டு பயங்கரவா தச் செயல்”. இச்சூழலில் தற்காப்புக்கா கவே காவலர் சுட்டார் என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைச் செயலர் கிறிஸ்டி நோம் பிரச்சாரம் செய்து வருகிறார். உண்மையில் அந்த காணொலி ஆதாரமானது அரசாங்கம் சொல்வதற்கு நேர்மாறாக உள்ளது. அரசின் வாதத்தில் உண்மையில்லை என அந்நகர மேயர் ஜேக்கப் ஃப்ரே மற்றும் சிவில் உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலையைக் கண்டித்து அமெரிக்கா முழுவதும் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட இடங்களில் சனி, ஞாயிற் றுக்கிழமைகளில் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்து கின்றனர். இந்தக் கொலைச் சம்பவம் குறித்து எஃப்.பி.ஐ விசாரணை நடத்தி வரும் நிலை யில், மின்னசோட்டா மாகாண காவல் துறை தனியாக ஒரு கிரிமினல் விசார ணையைத் துவங்கியுள்ளது.