
ஸ்ரீநகர், ஜூலை 17–
ஜம்மு–காஷ்மீரின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்ற வானிலை எச்சரிக்கை மற்றும் மோசமான வானிலை காரணமாக இன்று அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு காஷ்மீரின் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோயிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தா்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். அனந்த்நாக் மாவட்டத்தில் 48 கி.மீ. தொலைவுள்ள நுன்வான்–பஹல்காம் பாரம்பரிய வழித்தடம், கந்தா்பால் மாவட்டத்தில் 14 கி.மீ. தொலைவுள்ள பால்டால் வழித்தடம் என இரு வழித்தடங்களில் இந்த யாத்திரை நடைபெறும்.
நடப்பாண்டு பலத்த பாதுகாப்புடன் கடந்த மாதம் 3–ந்தேதி தொடங்கிய யாத்திரை, ஆகஸ்ட் 9–ந்தேதி வரை 38 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
ஜம்மு பகவதி நகா் முகாமில் இருந்து 786 பெண்கள், 19 குழந்தைகள் உள்பட 4,074 பேருடன் யாத்ரிகர்கள் கொண்ட குழு, 168 வாகனங்களில் காஷ்மீர் அடிவார முகாம்களுக்கு இன்று புறப்பட்டது. இந்த நிலையில் கடந்த 36 மணி நேரமாக ஜம்மு–காஷ்மீரின் பல பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் காஷ்மீரில் உள்ள யாத்திரை வழித்தடங்கள் உள்பட பல்வேறு இடங்களில் 2 நாளுக்கு கனமழை பெய்யக்கூடும் என்ற வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இரண்டு வழித்தடங்களிலும் யாத்ரீகர்கள் யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2 நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இரு வழித்தடங்களிலும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்று காஷ்மீர் பிரிவு ஆணையர் விஜய் குமார் பிதுரி கூறினார். இந்த ஆண்டு ஜம்முவிலிருந்து யாத்திரை நிறுத்தப்படுவது இதுவே முதல் முறை. இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை இதுவரை 47 லட்சத்துக்கும் மேற்பட்டோர்கள் தரிசித்துள்ளனர். இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் யாத்திரைக்காகஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?