கர்நாடக தொழிலதிபரை கடத்தி கொன்று தமிழக எல்லையில் உடல் வீச்சு: குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸார்

கர்நாடக தொழிலதிபரை கடத்தி கொன்று தமிழக எல்லையில் உடல் வீச்சு: குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸார்


ஓசூர்: கர்​நாடகா மாநில தொழில​திபரை கடத்​திக் கொலை செய்​து, அவரது உடலை தமிழக எல்​லை​யில் வீசிச் சென்​றவரை அம்​மாநில போலீ​ஸார் துப்​பாக்​கி​யால் சுட்​டுப் பிடித்​தனர். கர்​நாடக மாநிலம் பொம்​மசந்​திரம் அரு​கே​யுள்ள கித்​தனஹள்ளி பகு​தி​யைச் சேர்ந்​தவர் மாதேஷ். இவரை கடந்த 4-ம் தேதி மர்ம நபர்​கள் கடத்​தி சென்று கொலை செய்​தனர். இது தொடர்​பாக ஹெப்​ப கோடி போலீ​ஸார் வழக்​குப்பதிவு செய்து விசா​ரணை நடத்தி வந்​தனர்.


இந்​நிலை​யில், கடந்த 6-ம் தேதி அதே பகு​தி​யைச் சேர்ந்த தொழில​திபர் பாலப்பா ரெட்டி என்​பவரை ஜிகினி உள்​வட்ட சாலை​யில் சிலர் காரில் கடத்​திச் சென்​று, அவரது குடும்​பத்​தினரிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்​டினர்​.இது தொடர்​பாக அவரது குடும்​பத்​தினர் போலீ​ஸில் புகார் அளித்​தனர். விசா​ரணை​யில், பொம்​மசந்​தி​ராவைச் சேர்ந்த ரவி பிர​சாத் ரெட்டி என்​பவர் மாதேஷ் மற்​றும் பாலப்​பாரெட்டி ஆகியோரை பணத்​துக்​காக கடத்​திச் சென்று கொலை செய்​தது தெரிய​வந்​தது.


இதையடுத்​து, நேற்று முன்​தினம் கர்​நாடக போலீ​ஸார் ரவி பிர​சாத் ரெட்​டியை பிடிக்​கச் சென்​றனர். அப்​போது, ரவி பிர​சாத் ரெட்டி போலீ​ஸாரைத் தாக்கி விட்​டுத் தப்ப முயன்​றார். இதில் தலை​மைக் காவலர் அசோக் என்​பவருக்கு காயம் ஏற்​பட்​டது. இதையடுத்​து, ரவி பிர​சாத் ரெட்​டியை காவல் ஆய்​வாளர் சோமசேகர் துப்​பாக்​கி​யால் இரு கால்​களி​லும் சுட்​டு பிடித்​தார்.


காயமடைந்த ரவி பிர​சாத் ரெட்டி மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். அவரிடம் நடத்​திய விசா​ரணை​யில், சீட்டு நடத்தி நஷ்டம் ஏற்​பட்​டதை ஈடு செய்​வதற்​காக தொழில​திபர்​களைக் கடத்​திப் பணம் பறிக்க முயன்​றதும், பணம் கொடுக்​காத​தால் கொலை செய்​ததும், கொலை​யான பாலப்பா ரெட்​டி​யின் உடலைத் தமிழக எல்​லை​யான ஓசூர் சான​மாவு வனப் பகு​தி​யில் வீசி​யதும் தெரிய​வந்​தது. இதையடுத்​து, சான​மாவு வனப் பகு​திக்கு நேற்று சென்ற போலீ​ஸார், பாலப்பா ரெட்​டி​யின் உடலை மீட்​டுச் சென்​றனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%