கறிக்கோழி பண்ணைகளில் உற்பத்தி நிறுத்தம்: திருப்பூர், கோவையில் போராட்டம் தீவிரம்
Jan 05 2026
17
திருப்பூர்: கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை கோவை, திருப்பூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கறிக்கோழி உற்பத்தியாளர்கள் தொடங்கி யுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 40 ஆயிரம் கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதில், திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல், மதுரை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
கறிக்கோழி வளர்ப்புக் கூலியை உயர்த்தித்தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் உற்பத்தி யாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் கறிக்கோழி விவசாய பண்ணை அணி மாநில ஒருங்கிணைப்பாளர் ஏ.பி.டி.மகாலிங்கம் கூறிய தாவது: போதிய விலை கிடைக் காத சூழலில், இன்றைக்கு உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை கறிக்கோழி உற்பத்தியாளர்கள் தொடங்கி உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம், கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை தொடங்கி பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் தீவிர மடைந்துள்ளது. கறிக்கோழி வளர்ப்புக்கு கிலோவுக்கு ரூ.20 உயர்த்தி தந்தால் மட்டுமே, கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் பயன்பெற முடியும். கறிக்கோழிக்கு தேவையான உற்பத்திப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக தற்போது இந்த போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?