கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா; செப். 25 சென்னையில் நடக்கிறது! தமிழக அரசின் ஊடகச் செயலாளர் அமுதா பேட்டி
Sep 24 2025
27

சென்னை, செப். 22 -
தமிழக அரசு கல்வியில் செய்த சாதனைகள் குறித்த ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழா செப்டம்பர் 25 அன்று நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசின் ஊடகச் செயலா ளர் அமுதா ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா, “கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில், தமிழ்நாடு அரசு கல்வியில் செய்த சாதனை கள், சிறப்புகள் குறித்த மாபெரும் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. காலை உணவுத் திட்டம், நான் முதல்வன், தமிழ்ப் புதல்வன், புது மைப்பெண் உள்ளிட்ட 7 திட்டங்களை உள்ளடக்கி இந்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். இந்த திட்டத்தில் பங்கேற்று பயன்பெற்றவர்கள் தங்க ளது அனுபவத்தை விழாவில் பகிர்வார்கள். செப். 25 மாலை சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடை பெறும் இந்த விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த ஆண்டு 2.57 லட்சம் மாணவ - மாணவியர், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் பயன்பெற உள்ள நிலையில், கொண்டாட்ட நிகழ்வுடன் இதன் தொடக்க விழாவும் நடைபெற உள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 14.60 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 5.29 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலமும் லட்சக் கணக்கான மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட ஒரு லட்சம் பேருக்கு கூடுதலாக வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது” என்று அமுதா ஐஏஎஸ் தெரிவித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?