கல்விக்கோ அளவில்லை
கல்விக்கோ எல்லையில்லை
கல்விக்கோ அழிவில்லை
கல்விக்கோ திருட்டில்லை!
கல்விக்கோ மறைவில்லை
கல்விக்கோ கரையில்லை
கல்விக்கோ விலையில்லை
கல்விக்கோ வறுமையில்லை!
கற்போர்க்கே நாள்சிலவே
கற்போர்க்கே காலமில்லை
கற்போர்க்கே நாளில்லை
கற்போர்க்கே நேரமில்லை!
கற்போர்க்கே அழிவில்லை
கற்போர்க்கே குறைவில்லை
கற்போர்க்கே இனமில்லை
கற்போர்க்கே சாதியில்லை!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%