கவரப்பேட்டை பகுதியில் கும்மிடிப்பூண்டி - பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பாக பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

கவரப்பேட்டை பகுதியில் கும்மிடிப்பூண்டி - பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பாக பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் திமுக துணை பொது செயலாளர் ஆர் ராசா பங்கேற்பு......
கும்மிடிப்பூண்டி, அக். 6: கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை பகுதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி - பொன்னேரி சட்டமன்ற பகுதியில் பாக பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்எஸ்கே. ரமேஷ்ராஜ் தலைமை தாங்கினார்
மாவட்ட அவைத் தலைவர் மு. பகலவன், தெற்கு ஒன்றிய செயலாளர் கி.வே ஆனந்தகுமார் ஆகியோர் வரவேற்றார்கள்
தொகுதி பொறுப்பாளர்கள் கவி கணேசன், சுரேஷ், மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் டி.ஜெ.கோவிந்தராஜன், சி. எச். சேகர், ரமேஷ், உமாமகேஷ்வரி, ரவி, கதிரவன், தமிழரசு, அன்புவாணன்,முர்த்தி, குணசேகரன், வெங்கடாசலபதி,லோகேஷ், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்
தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக கழகத்தின் துணை பொது செயலாளர் ஆர் ராசா கலந்து கொண்டு கும்மிடிப்பூண்டி பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து பூத்துக் கழக பொறுப்பாளர்கள் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அவரால் ஒதுக்கப்பட்ட பூத்துகளில் திறம்பட பணி செய்து திமுக அமோக வெற்றி பெற செய்ய வேண்டுமென பாடுபட வேண்டும் எனவும் மத்திய காலம் பாஜக அரசு போலி வாக்காளர்களையும் தேர்தல் கமிஷன்களையும் கையில் வைத்துக்கொண்டு மாநிலங்களில் வெற்றி பெற்று வருகிறது அதுபோன்ற வாக்குத்திருட்டுகள் தமிழகத்தில் நடக்கக்கூடாது என்றால் அனைத்து பொறுப்பாளர்களும் கண் விழித்து பணியாற்ற வேண்டுமென பேசினார் இறுதியில் மாவட்ட துணை செயலாளர் எம். எல். ரவி நன்றி உரையாற்றினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?