கவர்னர் தேநீர் விருந்து - தமிழ்நாடு காங்கிரஸ் புறக்கணிப்பு

கவர்னர் தேநீர் விருந்து - தமிழ்நாடு காங்கிரஸ் புறக்கணிப்பு



 சென்னை,


நாட்டின் குடியரசு தினம் வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது.. குடியரசு தின விழாவையொட்டி தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, கவர்னர் மாளிகையில் அனைத்து கட்சிகளுக்கும் தேநீர் விருந்து வைக்க உள்ளார். இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி, தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு கவர்னர் மாளிகை அழைப்பு விடுக்கும்.


இந்நிலையில், குடியரசு தின விழாவையொட்டி கவர்னர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-


தமிழ்நாடு மக்களால் பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம்.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%