கவலை ஒரு வலை

கவலை ஒரு வலை


_______________________

கவலை இல்லாதவர் இருவர்தான்-

ஒருவன் கருவறையில் மற்றொருவன்

கல்லறையில்!


கவலை என்பது பெரும்பாலும்

நடக்காத எதிர்காலத்தைப் பற்றிய

பயமே கவலை!


கவலைப்படுவது என்பது அசையாத

நாற்காலியில் அமர்ந்து ஆடுவது போன்றது!


அது உங்களை எங்கும் கொண்டு சேர்க்காது ஆனால் உங்களை சோர்வடைய‌செய்யும்!


அது உங்களிடம் இருக்கும் அமைதியை மட்டுமே திருடிச் செல்லும்!


கவலைப்படுவது என்பது எரியாத

விளக்குக்கு திரி போடுவது போன்றது!


அது நேரத்தையும் ஆற்றலையும் 

வீணாக்குமே தவிர ஒளியை தராது!


நிழல் போன்றது பயம் இருக்கும் இடத்தில் கவலை நீளும்!


உண்மையை நேருக்கு நேர் சந்திக்கும்

போது கவலை மறைந்து விடு!


மனதிற்குள் பூட்டி வைக்கும் வரைதான்

கவலை பூதம்!


நம்பிக்கைக்குறியவர்களிடம் அதை பேசும் போது அது வெறும் தூசியாக 

மாறும்!


மனதின் கற்பனை திரையில் ஓடும்

தேவையற்ற காட்சிகள் கவலை!


கவலை என்பது மனதை மட்டுமல்ல

உடலையும் சிதைக்கும் மெதுவான

விஷம்!


இதுவும் கடந்து போகும் என்ற மனப்

பக்குவம் வந்துவிட்டால் எந்த கவலையும் அணுகாது!


நல்லதே நினைப்போம் நல்லது

நடக்கும்!



பெ.திருமுகம்

மணமேல்குடி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%