கவின் ஆணவப் படுகொலை வழக்கு: துணை ஆய்வாளர் ஜாமீன் கோரி மனு சிபிசிஐடி பதில் தர நீதிமன்றம் உத்தரவு

கவின் ஆணவப் படுகொலை வழக்கு: துணை ஆய்வாளர் ஜாமீன் கோரி மனு சிபிசிஐடி பதில் தர நீதிமன்றம் உத்தரவு

கவின் ஆணவ படுகொலை வழக்கில், சுர்ஜித்தின் தந்தை ஜாமீன் கோரிய மனுவிற்கு சிபி சிஐடி தரப்பில் பதிலளிக்குமாறு உயர் நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள் ளது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின், கடந்த ஜூலை 27ஆம் தேதி நெல்லை கேடிசி நகரில் வைத்து காதல் விவகாரத்தில் ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இதில் காதலியின் தம்பி சுர்ஜித், அவரது தந்தையான காவல் துணை ஆய்வா ளர் சரவணன், உறவினர் ஜெயபால் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர், இதில் கைது செய் யப்பட்டு சிறை யில் இருக்கும் சுர்ஜித் தின் தந்தை சரவணனின் ஜாமீன் மனு ஏற்கனவே நெல்லை நீதிமன்றத்தில் தள்ளுபடியா னது. இந்நிலை யில் தனக்கு ஜாமீன் கோரி சரவணன், உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் மனு செய்தார். அதில், ‘சம் பவம் நிகழ்ந்த போது, நான் ராஜபாளையத்தில் பணியில் இருந் தேன். சுர்ஜித் எனது மகன் என்பதை தவிர வேறு எந்த தொடர்பும் இந்த வழக்கில் எனக்கு இல்லை. இந்த வழக்கில் எனது ஜாமீன் மனு ஏற்கன வே தள்ளுப டியாகியுள்ளது. 98 நாட் களுக்கு மேலாக சிறையில் இருக்கி றேன்.எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என கூறியிருந் தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.முரளி சங்கர், மனுவிற்கு சிபிசிஐடி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யு மாறு உத்தரவிட்டார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%