காஞ்சி பால்வண்ணநாதர் ஆலயம் புதுப்பிக்க ரூ.2.5 கோடி அரசு நிதி
Jul 11 2025
25

காஞ்சிபுரம், ஜூலை 12
காஞ்சிபுரத்தில் உள்ள அருள்மிகு பச்சைவண்ணர் மற்றும் பவளவண்ணர் திருக்கோவில் 108 திவ்ய தேசங்களுள் 55 வது திவ்யதேசமாக விளங்குகிறது.
பல்வேறு புகழ்பெற்ற 63 கோவில்களை தொன்மை மாறாமல் புனரமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கி தமிழக முதல்வர் உத்தரவிட்டார். சென்னையில் நேற்று நடந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவில் புனரமைப்பு பணியினை துவக்கி வைத்தார். இதில் பச்சைவண்ணர் மற்றும் பவள வண்ணர் திருக்கோவில் புதுப்பிக்கும் பணிக்கு ரூபாய் 2.5 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் பவளவண்ணர் திருக்கோயில் வளாகத்தில் நடந்த விழாவில் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, கலெக்டர் கலைச்செல்வி, செல்வம் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், எழிலரசன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?