காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு!

காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பு!


வேலூர்,அக்.20-

வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளான 19ஆம் தேதி அதிகாலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதையடுத்து தீப, தூப ஆராதனைகள் வெகு விமரிசையாக நடந்தது. ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டன. தொடர்ந்து வெண் பொங்கல் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு படையலிடப்பட்டு அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் பட்டாச்சாரியார் ஸ்ரீ கண்ணன் பட்டாச்சாரியார் வெகு விமரிசையாக செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%