காட்பாடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா!
Jul 14 2025
79

வேலூர், ஜூலை 15-
வேலூர் மாவட்டம் , காட்பாடி வள்ளிமலை கூட்டுரோடு அருகில் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் ஆனி மாத சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.
இதையொட்டி ஸ்ரீவரசித்தி விநாயகருக்கு பல்வேறு வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மலர் மாலை, வெட்டிவேர் மாலை, அருகம்புல் மாலை, பட்டுவஸ்திரம் அணிவித்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதையடுத்து சுவாமிக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது. பூஜைகளை பிரம்மபுரம் ஸ்ரீ ஜெயக்குமார் அர்ச்சகர் விமரிசையாக செய்திருந்தார். ஸ்ரீ மஹாலஷ்மி பாத்திரக்கடை உரிமையாளர் ரமேஷ் குடும்பத்தார் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?