காதல் கவிதைகள் !

காதல் கவிதைகள் !

கவிஞர் இரா .இரவி !


ஒரே மாதிரி உருவம் 

கொண்டவர்கள் எழு பேர் 

உள்ளனர் என்பது பொய் !

என்னவள் போல உருவம் 

கொண்ட வேறு ஒருவரும் 

உலகில் இல்லை !

அவள் போல அவள் மட்டுமே !

---------------------------------

படித்த படிப்பு

மறந்து விடுகின்றன !

பாவையை பார்த்த 

பார்வை மறக்க 

முடியவில்லை !

-----------------------------------

சிக்கி முக்கி கற்கள் உரசி 

தீயை கண்டுபிடித்தான் 

ஆதி மனிதன் !

அவள் பார்வை என் பார்வை உரசி 

காதல் தீ கண்டுபிடித்தோம் !

--------------------------------------

ஒரே ஒரு புன்னகை செய்தாள்

ஓராயிரம் சக்தி என்னுள் பிறந்தன ! 

---------------------------------

பெண்ணும் புயலும் ஒன்று !

அதனால்தான் 

புதிய புயல்களுக்கு 

பெண்கள் பெயர் 

சூட்டுகின்றனர் ! 

----------------------------------

காற்று இல்லா 

வெற்றிடத்தில் 

மணி ஒலித்தாலும் 

ஓசை கேட்பதில்லை !

அவளிடம் நான் வைத்த

வேண்டுகோள் 

அவளுக்கு 

கேட்கவில்லை !

--------------------------------

பிரபல ஓவியர்கள் 

பலரிடம் 

அவளின் புகைப்படம் தந்து 

வரைய வேண்டினேன் !

ஒருவராலும் 

அவள் போல 

வரைய முடியவில்லை 

அவள் அவ்வளவு அழகு ! 

-------------------------------------


பிரபல சிற்பிகள் 

பலரிடம் 

அவளின் புகைப்படம் தந்து 

அவளை சிலையாக 

வடிக்க வேண்டினேன் !

ஒருவராலும் 

அவள் போல சிலை

வடிக்க முடியவில்லை 

அவள் அவ்வளவு அழகு !

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%