எண்ணத்தின் விருப்பத்தை
காதலோடு கவிதை
மாலை தொடுக்கும்
மனம் ஓர் காதல் சின்னம்.
காலத்தால் அழியாது
கண்கவர் காட்சிக்கு
விருந்தான நதி
யமுனாதீரம் ஓர் காதல் சின்னம்.
காதல் கண்கள்
பேசும் மௌன
கீதங்கள் இசைக்கும்
இதயம் ஓர் காதல் சின்னம்.
கார் கூந்தலில்
சூடிய ரோஜா
வாடி உதிர்ந்து
ஏட்டில் ஓர் காதல் சின்னம்.
இதயம் தொடும்
இத்தனையும் மறந்து
காதலின் சின்னம்
என்றதும் ........
"தாஜ்மஹால்"
அது முதல் காதலும் அல்ல
முற்று பெற்ற காதலும் அல்ல
மூன்றாம் மனைவிக்காக
மனதில் தோன்றிய ஒன்று !!
சிந்தனை மாற்றி
சிந்திப்போமே🤔
நா.பத்மாவதி
கொரட்டூர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%