விக்னேஷ் கல்லூரியில் விஷ்யுவல் கம்யூனிகேஷன் இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருந்த போது.. அவனை துரத்தி துரத்தி அன்பை பொழிந்து கொண்டிருந்தாள் அதே காலேஜில் முதல் வருடம் படித்துக்கொண்டிருந்த ஜானவி..
நல்ல அழகி.. சற்றே... குள்ளம்.. இடுப்பளவு தவழும் முடி.. முன்பக்கம் கொஞ்சமாக வெட்டியிருந்த தலைமுடி அவள் முகத்தில் விழுகையில் இடது கையால் ஒதுக்குவது கூட அவளை மிக அழகியாக சொக்க வைக்கும் மற்றவர்களை..
இவன் சீனியர் மூன்றாமாண்டு மாணவன்,நிரஞ்சன் அவளுக்கு ப்ரொப்போஸ் செய்ய .. எரிச்சலடைந்தாள் ஜானவி.. அவனோடு வந்து விக்னேஷ் முன் நின்றாள்.. இவன் விளையாட்டு மைதானத்தில் அமர்ந்து கிரிக்கெட் பார்க்கையில்..
"பாரு..இவர் மேல என் க்ளாஸ் கேர்ள்ஸ் கூட ,ஒரு கண்ணு வெச்சி திரியறாங்க. ஆனா.. என்கிட்ட வந்து ப்ரொப்போஸ் பன்றாப்ல.. நீ ஏன்டா என்னை பொருட்டாவே மதிக்க மாட்ற?.. இப்ப பதில் சொல்லு.. ", விக்னேஷ் நிரஞ்சன் காலேஜ் கெத்துங்கறதால எழுந்து நின்றான்..
" ப்ரோ.. எனக்கு பிடிக்கல.. உங்களுக்கு பிடிச்சிருக்குனு சொல்லியிருக்கீங்க.. இத எனகிட்ட எதுக்கு சொல்லனும்னு எனக்கு புரியல.. இவருக்கே என்னைய புடிச்சிருக்குனு என்னை வெறுப்பேத்த நினைக்கிறாள்னுதான அர்த்தம்.. எப்படிங்க எனக்கு வராத லவ்வ வரவைக்க முடியும்."
இப்போ நிரஞ்சன் இவளிடம் காண்டானான்..
" இவன் எனக்கு எந்த விதத்திலாவது ஈக்வலா?.. ம்ம்.. இவன் முன்னாடி கொண்டு வந்து வெச்சி.. என்னைய அசிங்கப்படுத்துற.. பெரிய இவளா நீ.. ", இழுத்து விட்டான் ஒரு அறை..
தொய்ந்த மலராக இவள் சாய.. அப்படியே தாங்கினான் தன் கரங்களில் விக்னேஷ்..
" பேசிட்டிருக்கும்போது ஏன் கை நீட்டுறீங்க .. சீனியர்னு கூட பார்க்க மாட்டேன்.. முடிஞ்சா என் மேல கை வைடா.. இடியட்"
அவர்கள் இருவரும் சண்டையிட்டு கொள்வதை கண்களில் நீர் வழிய பாத்துக்கொண்டிருந்தாள் ஜானவி.. மற்ற மாணவர்கள் வந்து அவர்களை பிரித்து விட.. உதட்டில் வழிந்த ரத்தத்தோடு நின்ற விக்னேஷிடம் தன் கர்ச்சீஃபை நீட்டினாள் ஜானவி..
அவளென்பதை கவனிக்காமல் வாங்கி துடைத்தவன்.. பின்னர் அவள் மேலே அதை எறிந்தான்..
" தேவையேயில்லாம இப்ப ஒரு சண்டை உன்னால.. என் பேரும் கெட்டு போயிட்டு இப்போ.. அவன் ஏற்கனவே திமிர் புடிச்சவன்.. ஜாக்கிரதையா இரு.. படிக்கிற வயசுல எதுக்கு இப்படி காதல்னு சாகுற.. பார்க்க வெறுப்புதான் ஜாஸ்தி ஆகுது.. கெட் லாஸ்ட் எவர்.. "
அவன் நண்பர்கள் அவனை நெட்டித்தள்ளிக்கொண்டு போக.. ஓடி வந்த அவள் தோழிகள் அவளை ஆறுதல் சொல்லி அழைத்து சென்றனர்.. அவன் உதிரம் இருந்த அந்த கைக்குட்டையை தன் நெஞ்சோடு சேர்த்துக்கெண்டவளை ஒன்னும் கண்டிக்க முடியாமல் விழித்தனர்.. அவள் காதல் பித்தை பார்த்து தலையிலடித்துக்கொண்டு நகர்ந்தனர்..
விக்னேஷின் நண்பன் சிவாவும் மைக்கேலும், அவன் ரூமில் , நடந்ததை கேட்டுக்கொண்டு கேள்விகளால் அவனை குடைய ஆரம்பித்திருந்தனர்..
" சரிடா..உனக்குதான் அந்த பொண்ணு மேல லவ் இல்லங்கிற..என்ன ____ க்கு அந்த சீனியர் பயல அடிக்க போன..இப்ப அவனுங்க கர்வம் வெச்சிட்டு உன்னைய டிஸ்டர்ப் பண்ணிட்டே இருப்பாங்களடா.?.பெரிய ஃபைட்டர் இவரு.."
" இல்லடா!..வன்முறை ..அதுவும்பெண் மேல..என்னால ஏத்துக்கவே முடியல மச்சான்..எங்க அக்காவ தாலி கட்டிட்டு அந்த இடியட் புருஷன்ங்கிற உரிமையில எவ்வளவு அடிச்சிருக்கான் தெரியுமா..அவ எதுவுமே எங்ககிட்ட சொல்லாம தற்கொலை பண்ணிக்கிட்டாடா..இத்தனைக்கும் தன் கர்ப்பத்துல அப்பதான் உருவாகியிருந்த சிசுவோட..பிரேதப்பரிசோதனையிலதான்டா இந்த விஷயமும் உடல் முழுசும் அடி வாங்குன தழும்புகளும் கண்டுபிடிச்சி சொன்னாங்க.பிடிவாதமா அவன்தான் வேணும்னு எங்களை எதுத்து கல்யாணம் பண்ணிக்கிட்டா அக்கா..
அதான் இந்த காதலும் எனக்கு புடிக்கல.."
" இப்படி ஒரு ஆழமான தழும்பு உன் மனசுல இருக்குனு எங்களுக்கு சொல்லவேயில்லையடா மச்சி..ஒருத்தன் தப்பானவன்னா,காதலிக்கிற எல்லோருமே அப்படி இருப்பாங்களாடா..? அந்த பொண்ணு உன் மேல பைத்தியமா இருக்காடா..நீ அவளை வான்டடா ஒதுக்குறேன்னு தெரிஞ்சும் ,உன் பின்னாடியே அலையிறதால அவ அருமை உனக்கு தெரியலைன்னு நாங்க நினைச்சோம்..",சிவா சொல்ல,
மைக்கேல் தொடர்ந்தான்..
"காதல் இல்லாமதான்டா இப்ப நிறைய கல்யாணம் டைவர்ஸ்ல முடியுது..உன் மனசுல வேற யாரும் இருந்தாங்கன்னா சொல்லு"
" அதுவும் காரணம்தான்டா..எங்க அம்மா அவங்க அண்ணன் பொண்ணுதான் எனக்கு கட்டனும்னு எங்க மாமாக்கிட்ட ப்ராமிஸ் பண்ணியிருக்காங்கடா.."
",இதையே ஜானவிக்கிட்ட செல்லித்தொலைக்கவேண்டியதுதான? சரி அந்த பொண்ணுக்கும் உன் மேல காதல் இருக்குல்ல..டச்ல இருக்கீங்கதான..லட்டர்..மெசேஜ் ..ஃபோன்னு ,எங்க கண்ணுல பட்டதே இல்லையடா..?"
" அது..அப்படிலாம் இல்லைடா..அது சின்னப்பொண்ணு . 12 வதுதான் படித்கிறா..அவள்ட்ட போய் என்ன பேசுறது..வயசுன்னு வந்தா, அரேன்ன்ஜ்மேரேஜ்தானடா.தானா நடக்கும்.."
" ஏதாவது போட்டோ வெச்சிருக்கியா ..காட்டு..? உன்னைய நம்ப முடியல..நிச்சயம் உன்கிட்ட தனி போட்டோ இருக்காது..ஃபேமிலி போட்டோவது காமி.."
விக்னேஷ் தன் செல்லில் சற்று தேடி எடுத்து தன் மாமா குடும்பத்துடன் இவர்கள் எடுத்த போட்டோவை காண்பித்தான்..
ஜூம் பண்ணி அந்த பெண்ணின் முகத்தை பார்த்த சிவாவும் மைக்கேலும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்..
"என்னடா..கறுப்பாயிருக்கா..எனக்கு பொருதத்தமாயில்லைனு ஏதாச்சும் உளறப்போறீங்களா..?"
" அவர்கள் குசுகுசுவென்று ஏதோ பேசிக்கொண்டனர்.பிறகு மைக்கேல் செல்ஃபோனில் கேலரியில் தேடி ஒரு போட்டைவை பார்த்து இந்த முகத்துடன் கம்பேர் பண்ணிவிட்டு..
" உன் மாமா பொண்ணு கன்னியாகுமரி பக்கமாடா?"
"ஆமாம்..ஏன்டா?"
" அது ஒன்னுமில்லை..நீ என்னா செய்யிற..எப்படியாவது உன் மாமா பொண்ணுக்கிட்ட தனியா பேசுற..உன்னை கல்யாணம் பண்ணிக்க அந்த பிள்ளைக்கு விருப்பம் இருக்கானா செக் பண்ணிக்க..ரைட்டா?", என்று இருவரும் வெளியே போய்விட..இவன் பின்னாடியே போனான்..
" என்னடா விஷயம்..சொல்லுங்கடா..?"
" இல்லை மச்சி..சொந்தம்னு வேற சொல்ற..நீ அந்த பொண்ணுக்கிட்ட பேசு மச்சி!"
" எதையோ மறைக்கிறீங்கடா?..என்னனு சொல்லப்போறிங்களா இல்லியா.."
அவர்கள் இருவரும் மௌனமாக இரண்டு போட்டோக்களை ஷேர் பண்ணினார்கள் இவனுக்கு..
தன் செல்லை எடுத்து பார்த்தவன் புருவங்கள் நெறிபட்டன விக்னேஷ்க்கு..ஜூம் பண்ணி பார்த்து விட்டு அப்படியே ரூமுக்குள் போய் விட்டான்..
" சாரிடா..மச்சி! நாங்க கன்னியாகுமரில க்ளாஸ் பாலம் போட்டதபாக்கலாம்னு ரெண்டுபேரும் போயிருந்தோமே மூனு மாசம் முன்பு.உனக்கு ஜூரம்னு நீ வரல ..அப்பதான் போட்ல போனப்ப, இந்த பொண்ணு யூனிஃபார்ம்ல, அந்த பையன் கூட ரொம்ப க்ளோசா இருந்துச்சு..கைய கோத்துக்கிட்டு ஒருத்தர் தோள்ல ஒருத்தர் சாஞ்சிக்கிட்டு..ஒரே செல்ஃபியா எடுத்துட்டு இருந்தாங்க..எதார்த்தமா நாங்க எடுத்த எங்க செல்ஃபிலயும் அவங்க விழுந்திருந்தாங்க..ரொம்ப நோட்டபிளா அவங்க பிஹேவ் பண்ணுனதால, முகம் கொஞ்சம் நல்லாவே மனசுல நின்னுச்சி."
இப்போ..விக்னேஷ்..அவர்களை கண்ணுக்கு நேரே பார்த்தான்..
"என் மாமா பொண்ணுதான்டா..கூட இருக்குறதும் என் பெரியம்மா பையன்தான்டா..
ப்ச்..இளவு காத்த கிளி நிலமையாயிருக்கும் இல்ல என் கதை.."
" நீ.. எதுவும் சீரியஸா லவ் பண்ணிட்டிருந்தன்னா..சாரிடா..மனச மாத்திக்க என்ன? அதுக்கு நீ ஜானவிய லவ் பண்ணுனு நாங்க சொல்லல ..ஆனா ஒரு ஜீவன் உனக்காக காத்திருக்குனு
புரிஞ்சிக்க..யோசி மச்சி..எதுவும் அவசரம் இல்லை!", என்று அவனை ரூமில் விட்டு சென்றனர்..
விக்னேஷ் அப்படியே கட்டிலில் சாய்ந்தான்..ஜானவி இவன் அலட்சியப்படுத்துவது தெரிந்தும் எப்படி அன்பை தொடர்ந்து கொண்டிருந்தாள் என்று ப்ளாஷ்பேக் ஓடியது..
தன் செல்போன் எடுத்து ..
"அவாய்ட்", என்று சேவ் பண்ணியிருந்த வாட்சப் நம்பரிலிருந்து வந்த மெசேஜ்களை பார்த்தான்..
எல்லாம் ஓரிறு வரிகள்.அவள் காதலை பறைசாற்றும் வரிகள்..தமிழ் ஆங்கிலம் என்று மாறி மாறி.அன்றன்று இவன் போட்டிருந்த டிரெஸ்களை பற்றி..இவனை அவள் ரசிப்பதை பற்றி...இதுவரை படிக்காத அந்த மெசேஜ்கள் இப்போ இவன் மனதில் ஜாலம் புரிந்தது..
முதலில்..அந்த நம்பரை லவ் ஆஃப் லைஃப் " என்று பெயர் மாற்றினான்..
தன் முதல் மெசேஜை தட்டினான்..
"பிடிவாதமாய் என் இதயம் நுழைந்தவளே!
காத்திருப்பேன் உனக்காக ..கடற்கரை பேருந்து நிறுத்தத்தில்..வந்துவிடு என் உயிரை தொட!", என்று ஆர்ட்டின்களை பறக்க விட்டான்..
மனதில் புது உற்சாகத்துடன்..முகம் கழுவி பைக்கில் கிளம்பி..போகும் வழியில் ,காதல் மலர்,ஒற்றை சிவப்பு ரோஜாவை வாங்கி தன் பெல்ட்டில் சொருகி கொண்டான்.எதிரில் வந்த நண்பர்களை கூட கவனிக்காமல் போக..அவர்கள் குறுஞ்சிரிப்புடன் கடந்தனர்..
" ப்பா..இப்பவாவது புரிஞ்சிக்கிட்டான..நல்ல லக்கி ஜோடி இல்லைடா" என்று பேசியவாறு நடந்தவர்கள்..அவசரமாக வந்த ஃபோன் காலுக்கு தலை தெறிக்க மருத்துவமனைக்கு ஓடினர்..
ஆம் நிரஞ்சன் காலையிலிருந்த தன கோபத்தை ..தன் காதலை ஏற்க மறுத்த ஜானவியை ஹாஸ்ட்டலில் நுழைந்து வெறித்தனமாக கத்தியால் குத்தி...அவள் ..அப்போதே இரத்தம் வழிய....
ஆம்..இவன் காதலை ஏற்று கொடுத்த மெசேஜை படித்த அந்த நிமிடம்தான் ,அவள் உயிர் பறிக்கப்பட்டிருந்தது..
பஸ்ஸ்டான்டில் அமர்ந்திருந்த விக்னேஷ் , கையிலிருந்த ரோஜாவில் அவள் முகமதை கற்பனையில் பார்த்திருந்தான்,மனம் முழுதும் காதலை நிரப்பி..அவன் கண்களுக்கு தெரியாமல்..கூடவே ஜானவியும்..அருவமாய்..ஆத்மாவாய்..தன் காதல் ஜெயித்த மகிழச்சியோடும்..அவனை சேர இயலா துயரத்தோடும்..
காலத்துக்கு சில சமயங்களில் இரக்கம் இருப்பதில்லைதான்..
💐💐
தஞ்சை பியூட்டிஷியன்
உமாதேவி சேகர் ..