கார்த்திகை தீபம்..

கார்த்திகை தீபம்..


🎉 கார்த்திகை மாதம் மிக மிக புனிதமானது. கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். திருக்கார்த்திகை அன்று இல்லங்களில் வரிசையாக தீப அலங்காரம் செய்வது வழக்கம். இதனால் தீய சக்திகள் விலகும், மகாலட்சுமி இல்லத்தில் குடி கொள்வாள் என்கிறது சாஸ்திரம்.


🎉 கார்த்திகை தீபம் என்றாலே தீபங்கள் நிறைய ஏற்றுவது தான். 


 நம்மிடம் உள்ள தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை எண்ணுவதற்காகத்தான் இந்த தீப வழிபாடு.


பழைய விளக்குகளை வீட்டில் ஏற்றலாமா?


🪔 வீட்டில் பழைய அகல் விளக்குகள் இருந்தாலும், வருடா வருடம் எல்லா விளக்குகளையும் வாங்க முடியாவிட்டாலும் ஒரு சில புதிய விளக்குகளை வாங்கி விளக்கேற்ற வேண்டும்.


🪔 பழைய அகல் விளக்குகளை கொதிக்கும் நீரில் துவைக்கும் சோப்பு சிறிது போட்டு ஊற வைக்கவும். அப்போதுதான் எண்ணெய் பிசுக்கு போகும். நன்றாக தேய்த்து கழுவி காய வைக்க வேண்டும்.


புதிய அகல் விளக்கு :


🪔 புதிய அகல் விளக்குகளை வாங்கி வந்தவுடன் ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி விளக்குகளை 4 மணி நேரமாவது போட்டு வைக்க வேண்டும். இதனால் விளக்குகளில் ஊற்றப்படும் எண்ணெய் கசிந்து விடாமல் இருக்கும்.


🪔 4 மணி நேரம் கழித்து விளக்குகளை நன்றாக தேய்த்து கழுவவும். கழுவியதை மின் விசிறி இருக்கும் இடத்திலோ அல்லது வெயில் படும் இடத்திலோ காய வைத்து எடுக்க வேண்டும்.


🪔 காய்ந்த மண் அகல் விளக்குகளை எடுத்து சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதால் விளக்கு மங்களகரமாக இருக்கும்.


🪔 திரி போடும் இடத்தில் பொட்டு வைக்காமல் இடைப்பட்ட இடங்களில் சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும்.


நெய் தீபம் :


🪔 முடிந்தால் எல்லா தீபங்களுக்கும் நெய் ஊற்றலாம். அப்படி இல்லையென்றால் காமாட்சி விளக்கு, குத்து விளக்கு போன்ற விளக்குகளுக்கு நெய் ஊற்றி தீபம் ஏற்றுதல் நல்லது. மற்ற விளக்குகளுக்கு நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம்.


தீபத்தை எப்படி குளிர்விப்பது?


🪔 தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தை குளிர்விப்பது வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.


🪔 விளக்கை குளிர்விக்கும்போது கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. மேலும் வாயால் ஊதி அணைக்கக்கூடாது. தீபத்தை பூவால் குளிர்விக்கலாம்.


🪔 தீபத்தை குளிர வைக்க, திரியின் அடிப்பகுதியை 'ஓம் சாந்த ஸ்ரூபிணே நம" என்று சொல்லி பின்புறமாக இழுக்க வேண்டும். அப்பொழுது தீச்சுடர் சிறிது சிறிதாக குறைந்து திரி எண்ணெய்யில் அமிழ்ந்து தீபம் குளிரும்.

 

Thanks and regards 

A s Govinda rajan 


தீபத்தன்று எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்?



கார்த்திகை மாதம் என்றாலே விளக்கிடும் மாதம் என்ற பெயர் உண்டு. விளக்கு ஏற்றி இறைவனை வழிபடக்கூடிய மாதம். கார்த்திகை மாதம் முழுவதும் நாம் விளக்கேற்றி வழிபடலாம். அப்படி வாய்ப்பில்லாதவர்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகவும் அவசியம்.


கார்த்திகை தீபத்திற்கு வீட்டில் எத்தனை விளக்குகள், எங்கு ஏற்ற வேண்டும்...?


ஒவ்வொருவர் வீட்டிலும் மாலை நேரத்தில் தீப திருநாளையொட்டி, விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். விளக்கை ஏற்றும்போது வீட்டில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும் என்பதில் எப்போதுமே ஒரு விதமான சந்தேகம் இருக்கும். 


அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு விளக்கு ஏற்றுவார்கள். ஒரு சிலர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விளக்கு ஏற்றுவார்கள். 


அந்த வகையில் வீட்டு முற்றத்தில் 4 விளக்கு, 

சமையல் கூடத்தில் 1 விளக்கு, 

நடையில் 2 விளக்கு,

வீட்டின் பின்புறம் 4 விளக்கு, 

திண்ணையில் 4 விளக்கு, 

மாட குழியில் 2 விளக்கு, 

நிலைப்படிக்கு 2 விளக்கு, 

சாமி படத்துக்கு கீழே 2 விளக்கு, 

வெளியே யம தீபம் ஒன்று, 

திருக்கோலம் இட்ட இடத்தில் 5 என மொத்தம் 27 விளக்குகள் ஏற்றவேண்டும்.


27 விளக்குகள் என்பது 27 நட்சத்திரங்களை குறிக்கும். எனவே 27 விளக்குகளை ஏற்றி தீபத் திருநாளில் சுவாமியை வழிபடுங்கள்.


தீபம் எத்தனை நாட்கள் ஏற்ற வேண்டும்?


முதல் நாள் பரணி தீபத்தன்றும், அடுத்த நாள் கார்த்திகை தீபத்தன்றும், அதற்கு மறு நாளும் என மூன்று நாட்கள் விளக்கேற்ற வேண்டும்.


விளக்கேற்றும் நேரம் :


கார்த்திகை மகா தீப நேரம் மாலை 6 மணி என்பதால், மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றுவது நல்லது.


சிவன் சக்தியின் அருள் :


தீபமானது அகல் விளக்கு, காமாட்சி விளக்கு, குத்து விளக்கு, கிளியன் சட்டி என பல வடிவங்களில் ஏற்றப்படுகிறது.


கிளியன் சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்ற வேண்டும். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.


வாழை இலை :


தீபம் வைக்கும்போது கண்டிப்பாக சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய வாழை இலையை கீழே வைத்து அதன் மீது விளக்கு வைக்க வேண்டும். வாழை இலைக்கு பதில் பசு சாணம் கூட வைக்கலாம்.

 

Thanks and regards 

A s Govinda rajan 


அண்ணாமலையார் தீபம்:


கார்த்திகை தீபத்திருநாள் அன்று திருவண்ணாமலையில் மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்திற்கு பெயர் அண்ணாமலை தீபம். 


இதற்காக மிகப்பெரிய கொப்பரையில் 24 முழம் துணியால் திரி செய்து அதில், கற்பூர தூள் வைத்து சுருட்டப்படும். பின்னர் அந்த திரியை, கொப்பரையில் வைத்து, நெய் வார்த்து, சுடர் எரிப்பார்கள். அது தூரத்திலிருந்து பார்க்க மலையில் தீபம் ஏற்றி வைத்தது போல சிறியதாக தெரியும். கிட்டத்தட்ட அந்த மலையிலிருந்து 60 கி.மீ தூரம் வரை இந்த சுடர் தீபம் போல தெரியும்.


வீட்டில் என்ன செய்ய வேண்டும்?


வாசலின் இரு முனைகளில் வைக்கப்படும் இரு விளக்குகள் புதிதாக இருப்பது கட்டாயம், மீதம் உள்ள இடங்களில் பழைய விளக்குகளை உபயோகப்படுத்தலாம். 


தீபத்திருநாள் அன்று சுத்தமான விளக்குகளில் புதிதாக எண்ணெய் ஊற்றியே விளக்கு ஏற்ற வேண்டும். ஏற்கனவே ஏற்றி வந்த விளக்கில் இருந்த எண்ணெயில் ஏற்றுதல் தவறு. கண்டிப்பாக விளக்கு எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


விளக்குகளில் மஞ்சள், குங்குமம் வைத்து தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். விளக்கை தரையில் வைக்கக் கூடாது. இதனால் எத்தனை தீபங்கள் ஏற்றுகிறோமோ அதற்கு ஏற்றது போல் வாழை இலை, ஆலம் இலை, அரச இலை ஆகியவற்றை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.


தீபத்தில் மூன்று தேவியர்களின் சங்கமம்:


தீபச் சுடரானது மகாலட்சுமியாகவும், அதில் தோன்றும் ஒளி சரஸ்வதியாகவும், வெப்பம் பார்வதியாகவும் கருதப்படுகிறது.


எந்த திசையில் விளக்கு ஏற்ற வேண்டும்?


கார்த்திகை தீபத்திருநாளில் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். 


மேற்கு நோக்கி தீபம் ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும். 


வடக்கு நோக்கி ஏற்றினால் திருமணத்தடை அகலும். 


தெற்கு திசை நோக்கி விளக்கு ஏற்றுவது மிக மிக தவறாகும்.


எத்தனை முகம் தீபம் ஏற்ற வேண்டும்?


குத்துவிளக்கு ஏற்றும் போது ஒரு முகம் ஏற்றினால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். 


2 முகம் ஏற்றினால் குடும்பத்தில் நன்மை உண்டாகும். 


3 முகம் ஏற்றினால் குழந்தை பேறு உண்டாகும். 


4 முகம் ஏற்றினால் செல்வம் பெருகும். 


5 முகம் ஏற்றினால் சகல நன்மையும் உண்டாகும்.


எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்?


குறைந்தபட்சம் 27 விளக்குகள் ஏற்ற வேண்டும் என கூறப்படுகிறது. இந்த 27 என்ற எண், 27 நட்சத்திரங்களை குறிக்கிறது. 27 வைக்க முடியாதவர்கள் குறைந்தது 9 விளக்குகள் கட்டாயம் ஏற்ற வேண்டும். வீடு முழுவதும் ஏற்ற முடியா விட்டாலும் நிலை வாசல் மற்றும் பூஜை அறையில் கண்டிப்பாக இரண்டு விளக்குகளாவது ஏற்ற வேண்டும்.

 


Thanks and regards 

A s Govinda rajan 


கார்த்திகை கூம்பு என்றால் என்ன?


கார்த்திகை மாதத்தில் வருகின்ற தீபத் திருநாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு நாள் ஆகும். கார்த்திகை தீபத் திருநாளில் மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள்.


கார்த்திகை தீப கொண்டாட்டம் ஏன்?


அடிமுடி காணமுடியாத ஜோதிப்பிழம்பாக சிவபெருமான் தோன்றினார். அதனால் பிரம்மனும், விஷ்ணுவும் சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட ஜோதியை எல்லோரும் காணும்படி காட்சியருள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். சிவபெருமான், திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று ஜோதிப்பிழம்பாக காட்சியருளினார். முழுமுதற்கடவுள் சிவபெருமானே என்ற நோக்கில் கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது.



கார்த்திகை கூம்பு :


கார்த்திகை தீப விழாவின் முதன்மையான நிகழ்வு சொக்கப்பனை ஏற்றுதல். பனை மரத்தை பூலோக கற்பக விருட்சம் என்றும், பொற்பனை என்றும் சிறப்பிப்பார்கள். அதை அக்னியின் வடிவம் என்பார்கள்.


கார்த்திகை தீபத் திருநாளில் பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து ஆலயத்தின் முன்னுள்ள முற்றத்தில் வெட்டவெளியில் நடுவார்கள். அதை சுற்றி 10 அல்லது 15 அடி உயரத்திற்கு பனை ஓலைகளைக் கொண்டு கூம்பு போன்று அமைப்பார்கள். மாலையில் ஆலயங்களின் உச்சியில் தீபம் ஏற்றியதும், பஞ்ச மூர்த்திகளுக்கு தீபாராதனை செய்து, கோவிலுக்கு முன்புறம் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கூம்புகளுக்கு முன்பாக எழுந்தருளச் செய்வார்கள்.


பின்னர், சுவாமிக்கு தீபாராதனை செய்து, அந்த சுடரால் இந்த சொக்கப்பனைகளை கொளுத்துவர். சுடர் வேகமாகப் பரவி கொழுந்துவிட்டு எரியும். அந்த ஜோதியை சிவனாகவே எண்ணி வழிபடுவார்கள். இது, அக்னி மய லிங்கமாகும்.


அறிவியல் ரீதியாக


கார்த்திகை மாத தீபத் திருநாளில் மட்டுமல்லாமல் கார்த்திகை மாதம் முழுவதும் நம் முன்னோர்கள் தீபமேற்றி வழிபட்டனர். ஏன் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றி வழிபட்டார்கள்?


கார்த்திகை மாதத்தில் மழைக்காலமும், பனியும் சற்று இணைந்தே குளிருடன் காணப்படும். இதனால் சளி, காய்ச்சல் அதிகமாகவே இருக்கும். அதுமட்டுமின்றி இக்காலத்தில் சிறு சிறு பூச்சிகளும், கொசுகளும் உலாவும்.


இதை கட்டுப்படுத்தவே நல்லெண்ணெய், காட்டாமணக்கு, சிற்றாமணக்கு, பசு நெய், வேப்பெண்ணெய் மற்றும் பலவகை மூலிகை எண்ணெய்களை பயன்படுத்தி வீடெங்கும் தீபமேற்றப்பட்டது.


இதனால் கொசு மற்றும் பூச்சிகள் குறைந்து நோய்களும் கட்டுக்குள் இருக்கும். மேலும் பல்வேறு மூலிகைகளை இந்நாளில் தூபமாக எரிப்பதாலும் பல்வேறு நன்மைகள் விளைகின்றன. 


அறிவியல் ரீதியாகவும் கார்த்திகை தீபத் திருநாள் நமக்கு பல நன்மைகளை அள்ளி தருகிறது.

 


 Thanks and regards 

A s Govinda rajan 

Kodambakkam Chennai 

600024

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%