காலிங்கராயன் பாசன பகுதிகளில் 980 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

காலிங்கராயன் பாசன பகுதிகளில் 980 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்



ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர், காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்கு திறக்கப்படுகிறது.


இதன் மூலம் 15 ஆயிரத்து 745 ஏக்கர் பரப்பளவில் நெல், மஞ்சள், வாழை, தென்னை, மக்காச்சோளம், மரவள்ளி கிழக்கு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, 2 -ம் போகம் பருவத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு, அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் ஈரோடு வைராபாளையம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இங்கு சன்ன ரகம் நெல் கிலோ ரூ.25.45க்கும், பொது மோட்டா ரகம் ரூ.25க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது: –


காலிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிகளில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. அறுவடை தொடங்கியபோதே அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நாள் ஒன்றுக்கு 1,000 மூட்டை என்ற கணக்கில் தற்போது வரை 980 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலான இடங்களில் ஒரிரு நாட்களில் அறுவடை பணிகள் நடைபெறவுள்ளதால், நெல் கொள்முதல் அளவு மேலும் அதிகரிக்கும்.


விவசாயிகள் தங்களிடம் உள்ள நெல்லை கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வந்து விற்பனை செய்து கொள்ளலாம். இவ்வாறு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


----------

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%