கீழே கிடந்த தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு

கீழே கிடந்த தங்கச் சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு



இராஜபாளையம், டிச.விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சோமியா புரம் தெருவைச் சேர்ந்தவர் ஷியாம்ராஜ் (40). இவர் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இராஜபாளை யம் காந்தி சிலையிலிருந்து முடங்கியார் சாலை நோக்கி வந்து கொண்டிருக்கும் பொழுது பிரபல வணிக நிறுவனம் முன்பு சாலையில் ஒரு தங்க கைசெயின் கிடந்தது. உரியவர் யார் என்பது தெரியாததால் அதை இராஜ பாளையம் தெற்கு காவல்துறையிடம் ஒப்படைத்தார். சிறிது நேரத்தில் தனது தங்க கைசெயின் காணவில்லை என்று செல்லம் வடக்கு தெருவைச் சேர்ந்த பார்த்திபன் (30) என்பவர் புகார் கொடுக்க இராஜபாளையம் தெற்கு காவல்நிலையம் வந்தார். பின்னர், உரிய அடையாளம் கேட்டு தங்க கைசெயின் தெற்கு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் ஒப்ப டைக்கப்பட்டது. உரியமுறையில் காவல்துறையில் ஒப்படைத்த பொறியாளர் ஷியாம்ராஜை அனைவரும் பாராட்டினர். 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%