குமரகுரு கல்லூரி மாணவிக்கு துப்பாக்கிச் சுடுதலில் 6 தங்கம்
Sep 18 2025
50

கோவை, செப். 16–
தமிழகத்தில் நடைபெற்ற 50-வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், குமரகுரு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவி எஸ்.மானிஷிகா தாரணி, ஆறு தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
துப்பாக்கிச்சுடுதலில் சாதனை படைத்த மாணவி மானிஷிகா, கோவையில் உள்ள குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் பயின்று வருகிறார். மேலும், இப்போட்டியில் 598 புள்ளிகள் எடுத்து, இந்த ஆண்டின் அதிகபட்ச இலக்கு ஸ்கோரையும் பதிவு செய்துள்ளார்.
சென்னையில் செப்டம்பர் 6 முதல் 14 வரை நடைபெற்ற இப்போட்டியை சென்னை ரைபிள் கிளப் நடத்தியது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ‘பீப் சைட் ஏர் ரைபிள்’ பிரிவில் மாணவி மானிஷிகா, தனிநபர் பிரிவில் மூன்று வெவ்வேறு பிரிவுகளிலும் (சீனியர், ஜூனியர், யூத்) தங்கம் வென்று அசத்தினார். மேலும், குழுப் போட்டியிலும் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று, மொத்தமாக ஆறு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
குறிப்பாக, 600 புள்ளிகளுக்கு 598 புள்ளிகள் என்ற இந்த ஆண்டின் அதிகபட்ச இலக்கு ஸ்கோரைப் பதிவு செய்து, தனது திறமையை நிரூபித்தார். இந்த அபார வெற்றியின் மூலம், இந்திய தேசிய துப்பாக்கிச் சுடுதல் அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பு அவருக்கு பிரகாசமாகியுள்ளது.
சாதனை குறித்துப் பேசிய மானிஷிகா, "கடந்த ஆண்டுகளில் வெண்கலம், வெள்ளிப் பதக்கங்கள் மட்டுமே வென்ற நிலையில், இந்த முறை எப்படியாவது தங்கப் பதக்கத்தை வெல்ல வேண்டும் என உறுதியுடன் இருந்தேன். கடந்த மூன்று ஆண்டுகளின் கடின உழைப்பின் பலன் இது. தேசியப் போட்டிக்குத் தயாராக உள்ளேன்" என்று தெரிவித்தார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?