குமிளங்காடு அதர்வனபத்ரகாளி தேவியின் திருவுருவ சிலைக்கு மஹா கும்பாபிஷேகம்
Sep 09 2025
165
சீர்காழி , செப் , 10 -
மயிலாடுதுறை மாவட்டம்
சீர்காழி தாலுக்கா, கோபாலசமுத்திரம் ஊராட்சி குமிளங்காடு ஸ்ரீ சுயம்பு ஆதிநாகாத்தம்மன் சக்தி ஆலயத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிநாக அதர்வனபத்ரகாளி தேவியின் விஸ்வரூப திருவுருவ சிலைக்கு மஹா கும்பாபிஷேகம் சிறப்பான முறையில் நடைபெற்றது.
குமிளங்காடு கிராமத்தில் சுயம்பு சூலமாக எழுந்தருளி அருள்பாலிக்கின்ற
ஸ்ரீ சுயம்பு ஆதிநாகாத்தம்மன் சக்தி ஆலயத்தின் காவல் தெய்வமாக விளங்கும் வடதிசை நோக்கி விஸ்வரூப திருகோலத்தில் எங்கும் காண முடியாத அளவில் 18 அடி உயரம் கொண்ட பத்து தலைகளோடு பத்து கரங்களுடன் பத்து விதமான ஆயுதம் ஏந்தி நாக குடைபிடித்து காட்சி தரும் ஸ்ரீ ஆதிநாக அதர்வனபத்ரகாளி தேவிக்கு ஜீர்ணோத்தாரண
கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. அருள்மிகு ஸ்ரீ சுயம்பு ஆதிநாகாத்தம்மன் சக்தி
ஜெய்குருதேவ் தெய்வேந்த அடிகளார் அதர்வனபத்ரகாளி தேவி சிலைக்கு புனித நீர் தெளித்தார்.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். அன்னதானம் வழங்கப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?