குருநானக் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக 2,100 சீக்கியர்களுக்கு பாகிஸ்தான் உயர் ஆணையம் விசா வழங்கியுள்ளது.
பாகிஸ்தானில், வருகிற நவம்பர் 4 ஆம் தேதிமுதல் 13 வரையில் குருநானக் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெறும் கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ள இந்தியாவைச் சேர்ந்த 2,100 சீக்கியர்களுக்கு தில்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையம் விசா வழங்கியுள்ளது.
முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான உறவுநிலை இருந்தபோதிலும், பாகிஸ்தானுக்கு இந்திய சீக்கியர்கள் செல்ல அனுமதியளித்த பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தில்லி அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா நன்றி தெரிவித்திருந்தார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?