குருவாயூர் கோவிலில் மீண்டும் ரீல்ஸ் வீடியோ - இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்குப்பதிவு

குருவாயூர் கோவிலில் மீண்டும் ரீல்ஸ் வீடியோ - இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்குப்பதிவு


திருவனந்தபுரம்,


கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோவிலிலுக்கு தினந்தோறும் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கேரளாவை சேர்ந்த பிக்பாஸ் பிரபலம் ஜாஸ்மின் ஜாபர் என்பவர், குருவாயூர் கோவிலில் உள்ள புனித குளத்தில் கால்களை நனைப்பது போல் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டிருந்தார்.


இது தொடர்பாக குருவாயூர் கோவில் நிர்வாகம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, குருவாயூர் கோவில் உள்ளிட்ட புனித தளங்களில் ரீல்ஸ் வீடியோ எடுக்க தடை விதித்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி, குருவாயூர் கோவிலில் இந்துக்கள் அல்லாதோர் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் குருவாயூர் கோவிலில் மீண்டும் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணர் குறித்த ஓவியங்களை வரைந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் ஜஸ்னா சலீம் என்ற பெண், குருவாயூர் கோவிலுக்கு சென்று ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். இது குறித்து கோவில் நிர்வாகம் புகார் அளித்த நிலையில், போலீசார் ஜஸ்னா சலீம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%