குழந்தைகள் தின விழா நகராட்சி நடுநிலைப்பள்ளி நம்பியார் நகர் நாளது 14.11.2025 குழந்தைகள் தின விழா வட்டார கல்வி அலுவலர் நா.மணி அவர்கள் தலைமையில் உள்ளூர் பிரமுகர் சத்யன் அவர்கள் முன்னிலையில் விழா சிறப்புடன் நடைபெற்றது தலைமை ஆசிரியர் ந. உலகாம்பிகை விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார் குழந்தைகள் தின விழா சிறப்பு நிகழ்வாக மாணவர்கள் அனைவருக்கும் வட்டார கல்வி அலுவலர் நா. மணி அவர்கள் குடைகள் வழங்கியும் ச.சத்யன் அவர்கள் எழுது பொருள்கள் மற்றும் இனிப்புகள் மற்றும் வழங்கியும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வி. ஆர்.நடராஜன் நீலாம்பாள் அவர்கள் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் சிறப்பித்தார்கள். மாணவ மாணவியர் கலை நிகழ்ச்சிகளும் பா சத்தியகலா அறிவியல் பட்டதாரி ஆசிரியை சிறப்பு கவிதை வாசித்தும் இடைநிலை ஆசிரியை கே.பி. தீபா அவர்கள் நன்றி உரை வழங்கினார்கள்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?