கேரம் போட்டியில் தங்கம் வென்று ஆக்ஸ்போர்டு பள்ளி மாணாக்கர் சாதனை
Nov 16 2025
10
கோவில்பட்டி காமராஜர் இன்டர்நேஷனல் அகாடமி சிபிஎஸ்சி பள்ளியில் நடைபெற்ற கேரம் போட்டியில் தென்காசி மாவட்டம் குத்துக் கல்வலசை ஆக்ஸ்போர்டு பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி மாணவ, மாணவிகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். அப்போட்டியில் ஒற்றையர் பிரிவு, இரட்டை யர் பிரிவு ஆட்டங்கள் நடைபெற்றன. அதில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் மாண வர்கள் எஸ்.அரிஃபீன் மற்றும் எம்.மஹசின் மன்ஹா ஆகிய இருவரும் இரண்டு பிரிவிலும் தங்க பதக்கம் பெற்றனர். இரட்டையர் பிரிவில் மாணவ, மாணவி கள் கலந்து கொண்டு அதில் டி. சையது இப்ரா ஹிம், கே.ஸ்ரீசரண், எஸ்.தருண், ஏ.ஹர்ஷிதா, எம்.பாத்திமா ரீனா, எஸ்.அப்ரா ஜஹான், ஏ.ஏஞ்சலினா டோரா, ஏ.சுருதிகா, ஆகியோர் தங்க பதக்கம் வென்றனர். ஒற்றை யர் பிரிவில் மாணவன் எஸ்.முகமது பர்வேஷ் கலந்து கொண்டு அதில் தங்க பதக்கம் பெற்றார். மேலும் கே. ஸ்ரீசரண், எம்.பாத்திமா ரீனா, ஏ.சுருதிகா, ஆகியோர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி நிர்வாகிகள் உட்பட பலரும் பாராட்டினர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?