
சென்னை:
அரசு மருத்துவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால், அவர்கள் எப்படி அச்சமின்றி சிகிச்சை அளிக்க முன்வருவார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கோபி கிருஷ்ணா தனது மூத்த மகன் பிரசன்னாவிற்கு முதுகுதண்டுவட சிகிச்சை யில் கவனக்குறைவு காரணமாக ஒரு கோடி இழப்பீடு கோரி தாக்கல் செய்த மனுவின் விசாரணையில் இந்த கருத்து தெரி விக்கப்பட்டது. நீதிபதி எம்.தண்டபாணி முன் நடந்த விசாரணையில், “ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நாள்தோறும் சுமார் 5 ஆயிரம் பேர் வரை சிகிச்சைக்காக வந்து செல்வதாக வும், அங்கு பணியாற்றும் மருத்துவர்களுக்கு எதிராக இது போன்ற வழக்கு தொடர்ந்தால், அவர்கள் எப்படி அச்சமின்றி சிகிச்சை அளிக்க முன் வருவார்கள்” என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். “மருத்துவத் துறையில் எல்லாவற்றிற்கும் ஓர் எல்லை உண்டு” எனவும் நீதிபதி கருத்து தெரிவித்தார். இதையடுத்து மனுதாரர் வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?