நாட்டில் பல கிரிக்கெட் மைதானங்கள் இருந்தாலும் சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, தில்லி, மும்பை, மொகாலி உள்ளிட்ட மைதானங்களுக்கு தனிச்சிறப்பு உள்ளது. காரணம் பிட்ச் அமைப்பு மிக அசத்தலாக இருப்பதால் பேட்டிங், பந்துவீச்சு சரிசமமாக எடுபடும். இதனால் அந்த மைதானங்களில் நடைபெறும் ஆட்டங்கள் மிக சுவாரஸ்யமாகவும், சாதனை அம்சங்களுடன் இருக்கும். ஆனால் தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான போட்டியில் கொல்கத்தா பிட்ச் படுமோசமாக இருந்தது. வேகம் மற்றும் பேட்டிங் எடுபடவில்லை. சுழற்பந்துவீச்சு மட்டுமே ஈடுபட்டது. இது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் தான் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மைதான பிட்சை அமைக்க கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது மிகவும் கண்டனத்துக்குரியது என ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?