கொளத்தூர் சோமநாத சுவாமி கோயில் சார்பில் 4 ஜோடிகளுக்கு இலவசத் திருமணம்: அமைச்சர் சேகர்பாபு சீர்வரிசை வழங்கினார்
இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (16–ந் தேதி) சென்னை கொளத்தூர் சோமநாத சுவாமி கோயில் சார்பில் 4 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருள்களை வழங்கினார்.
பின்னர், அமைச்சர் செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது:–
கடந்த 4 ஆண்டுகளில் கோவில்கள் சார்பில் 2,800 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் மேலும் 1,000 திருமணங்களை நடத்திட முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கின்றார். இத்திருமணங்கள் வரும் மார்ச் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும்.
கோவில்களின் சார்பில் மாற்றுத்திறனாளி இணைகளுக்கும் 4 கிராம் தங்கத் தாலியுடன் சீர்வரிசைப் பொருட்கள் வழங்கி இதுவரை 161 திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டுள்ளன.
400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொளத்தூர், சோமநாத சுவாரி திருக்கோவிலுக்கு ரூ. 2.73 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நவம்பர் 30–ம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. இந்த அரசு பொறுபேற்ற நாள் முதல் இன்று நடைபெறும் 8 கோயில்களின் குடமுழுக்கையும் சேர்த்து இதுவரை 3,813 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
ரூ. 8,100 கோடி மதிப்பிலான 8,028 ஏக்கர் திருக்கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதோடு, திருக்கோயில்களுக்கு சொந்தமான 2,20,502.84 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.
இந்த அரசு பொறுப்பேற்ற பின் உபயதாரர்கள்கோயில்களின் திருப்பணிக்கு ரூ.1,547.57 கோடியினை நன்கொடையாக அளித்துள்ளனர். இது இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்று சாதனையாகவும், உபயதாரர்கள் அரசின் மீதும், துறையின் மீதும் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் திகழ்கிறது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்கள் ஜ.முல்லை, சு.மோகனசுந்தரம், மாநகராட்சி மண்டலக் குழுத்தலைவர் சரிதா மகேஷ்குமார், மாநகராட்சி உறுப்பினர் நாகராஜன், உதவி ஆணையர்கள் க.சிவக்குமார், கி.பாரதிராஜா, திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் மோகன், சந்துரு, மகேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?