கோயில் ஊழியர்களுக்கு சிக்கன் மசாலா பரிசு

கோயில் ஊழியர்களுக்கு சிக்கன் மசாலா பரிசு



பந்தர்பூர்: நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து பல்வேறு நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு விதவிதமான பரிசுகளை வழங்கி வருகின்றன.


இனிப்புகள், படுக்கை விரிப்புகள் என தொடங்கி சில நிறுவனங்கள் சொகுசு கார்கள், இருசக்கர வாகனங்கள், நகைகள், அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்கி வருகின்றன.இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் பந்தர்பூரில் உள்ள விட்டல் கோயிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சிக்கன் மசாலா உட்பட பல உணவுப் பொருட்கள் தீபாவளி பரிசாக வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பிவிஜி நிறுவனம் வழங்கி உள்ளது.


இந்த நிறுவனம்தான் விட்டல் கோயிலுக்கு பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களை பணிக்கு அனுப்புகிறது. ஆனால், பிவிஜி நிறுவனம் தீபாவளி பரிசாக கோயில் ஊழியர்களுக்கு சிக்கன் மசாலா வழங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


மகாராஷ்டிராவில் கடவுள் விட்டலை (விஷ்ணு), வர்கரீஸ் பிரிவினர் வழிபடுகின்றனர். இவர்கள் முழுக்க முழுக்க சைவ உணவை வலியுறுத்தி வருபவர்கள்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%