கோவாவில் சர்வதேச திரைப்பட விழா: மத்திய மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்தார்
Nov 23 2025
14
கோவாவில் சர்வதேச திரைப்பட விழாவை, மத்திய மந்திரி எல்.முருகன் நேற்று தொடங்கி வைத்தார். இந்த விழா 28-ந்தேதி வரை நடக்கிறது.
இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் உள்ள பன்ஜிமில் நேற்று தொடங்கியது.
விழாவை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை மந்திரி எல்.முருகன் தொடங்கி வைத்து பேசியதாவது:-
இந்தியா உலகளாவிய திரைப்பட தயாரிப்பு மையமாக உருவெடுக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை. இந்த வேவ்ஸ் பிலிம் பஜார் நிகழ்வு படைப்பாளர்களுக்கும், திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் இடையிலான பாலமாக திகழ்கிறது. இளம் படைப்பாளிகளையும், புதிய கதைகளை கொண்டுள்ளவர்களையும் ஆதரிப்பதற்கான தளமாக இது செயல்படுகிறது.
இந்த ஆண்டு 124 புதிய படைப்பாளிகள் பங்கேற்று உள்ளனர். இந்திய கலாச்சாரத்தை உலகிற்கு எடுத்துச் செல்வதில் இது முக்கியப் பங்கு வகிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கொரிய குடியரசின் தேசிய அவை உறுப்பினர் ஜேவோன் கிம் வந்தே மாதரம் பாடலை பாடியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 50 ஆண்டுகளை கடந்த தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு நினைவுப்பரிசு அளித்து கவுரவிக்கப்பட்டது.
விழாவில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செய லாளர் சஞ்சய் ஜாஜு, கூடுதல் செயலாளர் பிரபாத், விழா இயக்குனரும், தயாரிப்பாளரு மான சேகர் கபூர், நடிகர் அனுபம் கெர், வேவ்ஸ் பஜாரின் ஆலோசகர் ஜெரோம் பைலார்ட், ஆஸ்திரேலிய திரைப்பட இயக்குனர் கார்த் டேவிஸ், தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் பிரகாஷ் மக்தூம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?