கோவில்பட்டி கல்லூரியில் " தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டம் "

கோவில்பட்டி கல்லூரியில்  " தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டம் "



மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கௌ.இந்துமதி பங்கேற்ப்பு.


புதுமை பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்களுக்கான 2025-26 கல்வி ஆண்டின் தொடக்க விழா சென்னை மற்றும் தெலங்கானாவில் நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இணைந்து திட்டங்களை தொடங்கி வைத்தனர்.


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுபா நகர் உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்

" தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டம் " புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களின் 2025 - 2026 கல்வி ஆண்டிற்கான தொடக்க விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்,மகளிர் தொண்டரணி மாவட்ட சமூக வலைத்தள ஒருங்கிணைப்பாளர் கௌ.இந்துமதி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினார்.


பின்னர் அவர் பேசுகையில்,


புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம் குறித்தும், இந்த இரு திட்டங்களின் மூலம் 2.57 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்றும் மாணவ, மாணவிகள் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார். அரசு திட்டங்களில் பயனடையும் வழிமுறைகள் குறித்து விளக்கினார்.

இதில் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.


ஆனந்த பாஸ்கர் செய்திகளுக்காக


கோவில்பட்டி செய்தியாளர் - ராஜ்குமார்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%