கோவில்பட்டி ஸ்ரீ செல்வ முனீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை
Sep 24 2025
30

அம்மா பேரவை நகரச் செயலாளர் V.ஆபிரகாம் அய்யாதுரை தொடங்கி வைத்தார்.
திருவிளக்கு பூஜையை முன்னிட்டு ஸ்ரீ செல்வ முனீஸ்வரர், ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ பராசக்தி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.;
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊரணித் தெருவில் ஸ்ரீ அதிர்ஷ்ட விநாயகர், ஸ்ரீ செல்வ முனீஸ்வரர், ஊரணித்தெரு ஸ்ரீ கருப்பசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மகாளய அமாவாசையன்று கோவில் கொடை விழா வெகு விமரிசையாக நடைபெறும். அவ்வகையில் 12ஆம் ஆண்டு கொடை விழா கடந்த 10ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கொடை விழாவில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ செல்வ முனீஸ்வரர் அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருவிளக்கு பூஜை செவ்வாய்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஊரணித்தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சிறுமிகள், பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் விளக்கு பூஜைக்கான பொருட்கள் வழங்கப்பட்டன.
விளக்கு பூஜை அதிமுக அம்மா பேரவை நகரச் செயலாளர், கோவில் கமிட்டி தலைவர் V.ஆபிரகாம் அய்யாதுரை தலைமையில் நடந்தது.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்.ஆர்.வி.கவியரசன் கலந்து கொண்டு விளக்கு பூஜையில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கி அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை சிறப்பாக செய்திருந்தார்.
ஆனந்த பாஸ்கர் செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர் - ராஜ்குமார்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?