சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் – வேல்முருகன் எம்.எல்.ஏ. வாக்குவாதம்

சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் – வேல்முருகன் எம்.எல்.ஏ. வாக்குவாதம்


சென்னை, அக். 17–


சட்டசபையில் இன்று அமைச்சர் துரைமுருகன் – வேல்முருகன் எம்.எல்.ஏ. இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பண்ருட்டி தொகுதி உறுப்பினர் தி.வேல்முருகன் பேசுகையில், காவிரி நீரின் உபரி நீரானது அந்தியூர் – பவானி தொகுதியின் ஒரு பகுதி மக்கள் விவசாயம் செய்வதற்கு கிடைக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பாக அந்தப் பகுதி விவசாயிகள் சார்பாக உங்கள் இல்லத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தேன். ஒரு கவன ஈர்ப்பு தீர்மானமும் நேற்றைய தினம் அளித்திருக்கிறேன். எனவே நீரூற்று மூலமாக அந்தியூர் – பவானி தொகுதியின் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு கிடைக்காத நீரை காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் கொண்டு வந்து விவசாயம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார்.


அதற்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "அந்தியூர் பிரச்சினையை பற்றி பேச அந்த தொகுதி உறுப்பினர் இருக்கிறார்" என்று பதில் அளித்தார். அமைச்சர் துரைமுருகன் இவ்வாறு கூறியதால் கடும் கோபம் அடைந்த வேல்முருகன், அவருடைய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.


ஆனால், சபாநாயகர் அப்பாவு, அவருக்கு தொடர்ந்து பேச அனுமதி அளிக்கவில்லை. உரிமையோடு அவை முன்னவர் உங்களுக்கு பதிலளித்துள்ளார். அனுமதி இல்லை உட்காருங்கள் என்று அப்பாவு தெரிவித்தார். ஆனாலும் வேல்முருகன் குரலை உயர்த்தி பேசிக் கொண்டே இருந்தார். நீங்கள் பேசியது எதுவும் அவைக் குறிப்பில் இடம்பெறாது. ஜீரோ ஹவரில் இப்படியெல்லாம் பேசக் கூடாது என்றார். மேலும் பேசுகையில், அமைச்சர் கூறியதிலும் தவறில்லை. உங்கள் கேள்வியிலும் தவறில்லை. உட்காருங்கள் என்று சமாதானப்படுத்தி கொண்டே இருந்தார்.


இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%