சட்டையில் இடது பக்கம் மட்டும் பாக்கெட் இருப்பது இதுக்குத்தான்* ....

சட்டையில் இடது பக்கம் மட்டும் பாக்கெட் இருப்பது இதுக்குத்தான்* ....


முத்து ஆனந்த் வேலூர் - 632 002*

 

நாம் தினமும் அணியும் ஆடைகளில் சில அம்சங்களை நாம் பெரும்பாலும் கவனிக்க மறந்துவிடுகிறோம். அதில் முக்கியமான ஒன்று, சட்டையில் உள்ள பாக்கெட். சிறுவயதில் நாம் அந்த பாக்கெட்டில் சாக்லேட், கோலிக்குண்டு போன்ற நம் சிறிய பொக்கிஷங்களை வைத்திருப்போம்.


வயது முதிர்ந்த பிறகு, அந்த பாக்கெட்டில் பேனா, பணம், அல்லது செல்போன் போன்ற தேவையான பொருட்களை வைப்பது வழக்கமாகிவிடுகிறது. ஆனால், நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா — ஏன் பெரும்பாலான சட்டைகளில் பாக்கெட் இடது பக்கம் மட்டுமே இருக்கிறது என்று?


சட்டை பாக்கெட்


இன்று நாம் பாக்கெட்டை ஒரு சாதாரண அம்சமாகவே கருதுகிறோம், ஆனால் அது ஒரு காலத்தில் முக்கியமான கண்டுபிடிப்பாக பார்ப்பப்பட்டிருந்தது. அந்த காலகட்டத்தில், மக்கள் பேனா, கடிதங்கள் அல்லது நாணயங்களை கையில் கொண்டு செல்ல வேண்டி ஏற்பட்ட சிரமம் காரணமாக, அவற்றை பாதுகாப்பாக வைக்க இடம் தேவைப்பட்டது.


அந்த தேவையைப் பூர்த்தி செய்ய, ஆடையில் ஒரு சிறிய பையைப் போன்ற அமைப்பாக பாக்கெட் உருவாக்கப்பட்டது. இது மக்களுக்கு பலரீதியான வசதிகளை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் பாக்கெட்டுகள் உடலின் பல பகுதிகளில் தைக்கப்பட்டிருந்தாலும், காலப்போக்கில் அது சட்டையின் நிலையான ஒரு பகுதியாக உருவெடுத்தது. இந்த கண்டுபிடிப்பு ஆடைகள் பயன்பாட்டை மேலும் மேம்படுத்தியது.


ஏன் இடது பக்கம் மட்டும் பாக்கெட் உள்ளது?


பாக்கெட்டுகள் பெரும்பாலும் ஏன் இடது பக்கத்தில் இருக்கின்றன என்பது பற்றி ஒரு எளிமையான விளக்கம் உள்ளது. உலகத்தில் பெரும்பாலானவர்கள் வலது கைதான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். நாம் செய்யும் பெரும்பாலான செயல்களிலும் வலது கை முக்கிய பங்கு வகிக்கிறது.


அதனால், வலது கையால் எளிதாக எட்டக்கூடிய இடமாக இடது பக்கம் கருதப்படுகிறது. பாக்கெட் அந்த இடத்தில் இருந்தால், அதிலிருந்து பொருட்களை எடுத்து வைப்பது வசதியாக இருக்கும். உதாரணமாக, பேனாவை எடுத்து எழுதுவது அல்லது சில்லறையை எடுத்து கொடுப்பது போன்ற செயல்களில் வலது கை பயன்படுத்தப்படுவதால், இடது பக்கம் இருக்கும் பாக்கெட்டிலிருந்து எடுப்பது மிகவும் சுலபமாகும்.


 *பாக்கெட்டின் வளர்ச்சி* :


தொடக்க காலங்களில், பாக்கெட்டுகள் பெரும்பாலும் ஆண்கள் அணியும் சட்டைகளில்தான் இடம் பெற்றிருந்தன. இதற்கான காரணம், ஆண்கள் அலுவலக வேலைகளுக்குச் செல்லும்போது பேனா, சிறிய டைரி போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் அதிகமாக இருந்தது. மாறாக, பெண்களின் உடைகள் பாக்கெட்டுகள் இல்லாமல் வடிவமைக்கப்பட்டன, ஏனெனில் அவர்கள் அத்தகைய பொருட்களை தினசரி கொண்டு செல்ல வேண்டிய தேவை குறைவாக இருந்தது.


ஆனால் காலத்தின் மாற்றத்துடன், சமூக அமைப்பிலும் பெண்களில் பங்கேற்பு ஏற்பட்ட முன்னேற்றங்களால், பெண்களின் ஆடைகளிலும் பாக்கெட்டுகள் சேர்க்கப்படத் தொடங்கின. இப்போது பெண்கள் அணியும் சட்டைகள், டி-ஷர்ட்கள் மற்றும் பேன்ட்களிலும் கூட பயன்பாட்டிற்காக பாக்கெட்டுகள் தைக்கப்படுகின்றன.


இவ்வாறு, சட்டையில் பாக்கெட் ஏன் பெரும்பாலும் இடது பக்கம் தான் இருக்கும் என்பதற்கான காரணம் இது தான்.


தெரிந்து கொள்வோம்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%