சத்துவாச்சாரியில் சிறுவர் பேட்மிண்டன் போட்டி: ஸ்ரீ நாராயணி மருத்துவமனை இயக்குனர் என்.பாலாஜி துவக்கி வைத்தார்

சத்துவாச்சாரியில் சிறுவர் பேட்மிண்டன் போட்டி: ஸ்ரீ நாராயணி மருத்துவமனை இயக்குனர் என்.பாலாஜி துவக்கி வைத்தார்



வேலூர் டிச.


வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயில் நிறுவனர் ஸ்ரீ சக்தி அம்மாவின் 50-வது பொன்விழா ஜெயந்தியை முன்னிட்டு, சத்துவாச்சாரியில் சிறுவர்களுக்கான பேட்மிண்டன் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது. இந்த போட்டியினை ஸ்ரீ நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் என். பாலாஜி தொடக்கி வைத்து சிறப்பித்தார்.


வேலூர் திருமலைக்கோடியில் நாரயணி பீடத்தின் வாயிலாக ஸ்ரீபுரம் தங்க கோயிலை நிறுவிய ஸ்ரீசக்தி அம்மாவின் ஜெயந்தி வரும் ஜனவரி 3-ந்தேதி பொன்விழாவாக கொண்டாட உள்ள நிலையில், சக்தி அம்மாவிற்க்காக பல்வேறு நிகழ்ச்சிகள் பக்தகோடிகள் நடத்தி வருவதன் தொடர்சியில் வேலூர் சத்துவாச்சாரி பேஸ் - 1 பகுதியில் சிறுவர்களுக்கான பேட்மிண்டன் நடத்தப்பட்டது.


இதில் நூற்றுகணக்கான சிறுவர் சிறுமிகள் பங்கேற்று இருந்தனர். இந்த சிறப்புமிகு பேட்மிண்டன் போட்டியினை சிறப்பு விருந்தினராக ஸ்ரீ நாராயணி மருத்துவமனை இயக்குனர் என்.பாலாஜி கலந்து கொண்டு இப்போட்டியினை தொடக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:–


ஸ்ரீபுரம் தங்க கோயிலை நிறுவிய ஸ்ரீ சக்தி அம்மாவின் 50-வது ஜெயந்தியை முன்னிட்டு, பக்தகோடிகள் பல நற்காரியங்கள் செய்து சிறபித்து வருவது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. அந்த வகையில் சத்துவாச்சாரி பேஸ் - 1 பகுதியில், உயரிய நோக்குடன் இந்த பேட்மிண்டன் போட்டி நடத்துவது பாராட்டுக்குரியது. மேலும் இந்த விளையாட்டு, சிறுவர் சிறுமிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக அமையும் என நம்புகிறேன். இத்துடன் சிறுவர்கள் தங்கள்கல்வியில் முழு ஈடுபாட்டுடன் கற்க வேண்டும் என இயக்குனர் என்.பாலாஜி பேசினார்.


இந்த பேட்மிண்டன் போட்டி பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டு, இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் முதல் இடத்தை பிடித்தவர்களுக்கு ரூ.1500 பரிசாகவும், இரண்டாம் இடத்தை பிடித்தவர்களுக்கு ரூ.750 - வழங்கப்பட்டது. ஒற்றையர் பிரிவில் முதல் இடத்தை பிடித்தவருக்கு ரூ.1000, பரிசாகவும் இரண்டாம் இடத்தை பிடித்தவருக்கு ரூ.750 - வழங்கப்பட்டது. மேலும் இந்த போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%