நாம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இரவு உணவு வகைகளில் அடையும் ஒன்று. அதுவும் இந்த நவதானிய அடை சாப்பிட்டால் உடல் பலம்அதிகரிக்கவும், உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் நம்மால் பெற முடியும். இது நார்ச்சத்து மிக்க உணவு.
தேவையானப் பொருட்கள் :
பச்சரிசி - ஒரு கப்
கோதுமை - ஒரு கப்
துவரம்பருப்பு - கால் கப்
கடலைப்பருப்பு - கால் கப்
பயத்தம்பருப்பு - கால் கப்
கொண்டைக்கடலை - அரை கப்
மொச்சை - கால் கப்
எள்ளு - கால் கப்
உளுத்தம்பருப்பு - கால் கப்
காராமணி - கால் கப்
நிலக்கடலை - கால் கப்
காய்ந்த மிளகாய் - 8
பெரிய வெங்காயம் - 2
இஞ்சி - ஒரு பெரிய துண்டு
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
🍳 முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை, பச்சரிசி, பருப்பு வகைகள் மற்றும் தானியங்களை முதல் நாள் இரவே நன்றாகக் கழுவி ஊறவைத்துக் கொள்ளவும். பிறகு மறுநாள் ஊறவைத்த தானியங்களை தண்ணீர் வடித்துக் கொள்ளவும். பிறகு, பெரிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
🍳 பின்பு ஊற வைத்த அரிசி, பருப்பு வகைகள், தானியங்கள், காய்ந்த மிளகாய், நறுக்கிய இஞ்சி போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதில் தேவையான உப்பு, பெருங்காயத்தூள், நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
🍳 பிறகு, தோசைக்கல்லை அடுப்பில் வைத்து மாவை சற்று கனமாக ஊற்றி, அடையாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் ஊற்றி வேகவிட்டு நடுவில் ஒரு சிறிய துளை போட்டு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக எடுத்தால் மொறுமொறுப்பாக சத்து நிறைந்த நவதானிய அடை தயார். இந்த அடைக்கு இஞ்சிச் சட்னி தொட்டு சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
Thanks and regards
A s Govinda rajan
வெள்ளரிக்காயின் மருத்துவ பயன்கள்
☆வெள்ளரிக்காய் நன்கு செரிமானம் ஆகக்கூடியது. சிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்வது மட்டுமல்லாமல் இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் ஆற்றும். மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.
☆காய்கறிகளிலேயே குறைவான கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய். வெள்ளரிக்காய் மிகவும் குளிர்ச்சியானது.
☆வெள்ளரிக்காய் பித்தநீர் மற்றும் சிறுநீரகம் ஆகிய சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்கும். மேலும், வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்கும். வெள்ளரிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று நோய் மற்றும் தொண்டை நோய்கள் தீரும்.
☆வெள்ளரிக்காயில் புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் பி, சி ஆகியவை உள்ளன. வயிற்றுப்புண் உள்ளவர்கள் வெள்ளரிச் சாற்றை தினமும் அருந்தி வந்தால் வயிற்றுப்புண் ஆறும்.
☆தினசரி இரண்டு வெள்ளரிக்காய்களைச் சாப்பிட்டால் குடல் சுத்தமாகும். நீரிழிவு நோயாளிகளின் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும். சிறிய வெள்ளரிக்காய் என்றாலும் பெரியவகை வெள்ளரிக்காய் என்றாலும், அதை விதையுடன் தான் அரைத்துச் சாறு அருந்த வேண்டும்.
☆வெள்ளரிகாயில் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், மற்றும் குளோரின் உள்ளன. இரத்ததில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. ஈரல் மற்றும் கல்லீரலில் உள்ள சூட்டைத் தணிப்பதால் நோய் குணமாகும். மேலும் இது வயிற்றில் சேரும் கொழுப்புகளைக் கரைக்கும்.
☆நுரையீரல் கோளாறுகள், கபம் இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயை சாப்பிடுவது நல்லதல்ல.
Thanks and regards
A s Govinda rajan
மிருதுவான நாண்
நாண் என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இரவு வகைகளில் ஒன்று. மைதாவில் புரோட்டா மட்டுமே சாப்பிட்ட உங்களுக்கு வித்தியாசமான சுவையில் வீட்டிலேயே நாண் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள் :
மைதா மாவு - 2 கப்
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
சோடா மாவு - கால் தேக்கரண்டி
பால் - அரை கப்
தயிர் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - அரை தேக்கரண்டி
செய்முறை :
🌀 முதலில் மைதா மாவை நன்றாக சலித்து ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் பேக்கிங் பவுடர், சோடா மாவு, சர்க்கரை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.
🌀 பின்பு, வெது வெதுப்பான பால், தயிர், மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து மூடி போட்டு நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.
🌀 பின்பு, மாவை பெரிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். அவற்றை சப்பாத்தி இடுவது போல் மெலிதாக தேய்த்துக் கொள்ளவும். பிறகு, தோசைக்கல்லில் போட்டு இருபுறம் வேகவிட்டு எடுத்தால் சுவையான மிருதுவான நாண் தயார்.
Thanks and regards
A s Govinda rajan
கார்ன் இட்லி
கார்ன் அல்லது சோளத்தில் அதிகளவு மாவுசத்தும், நார்சத்தும் அடங்கியுள்ளதால் சோளத்தை பயன்படுத்தி செய்த உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு அதிக அளவில் சக்தி கிடைக்கும். மேலும் சாதாரணமாக அரிசி மாவைப் பயன்படுத்தி செய்யப்படும் இட்லிக்கு பதிலாக கார்னைப் பயன்படுத்தி கார்ன் இட்லியை வீட்டில் சுவையாக எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
கார்ன் - 4 கப்
உளுத்தம் பருப்பு - 1 கப்
வெந்தயம் - 1ஃ4 கப்
கடுகு - 1ஃ4 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1ஃ4 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
கொத்தமல்லி தழை - 1ஃ4 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
✓ கார்ன் இட்லி செய்வதற்கு முதலில் கார்ன், உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை 1 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.
✓ நன்கு ஊறியதும் கார்ன், உளுத்தம்பருப்பு, வெந்தயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக கிரைண்டரில் போட்டு இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
✓ பிறகு ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி சூடானதும், அதில் கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள மாவு கலவையில் போட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
✓ அடுத்து இட்லி தட்டில் எண்ணெய் தடவி, அதில் கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி இட்லிகளாக சுட்டு எடுத்தால் சுவையான கார்ன் இட்லி தயார்.
✓ கார்ன் இட்லியுடன் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
Thanks and regards
A s Govinda rajan
பீட்ரூட்டின் மருத்துவ பயன்கள்
???? நாம் அன்றாட உணவில் பீட்ரூட்டை சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம். பீட்ரூட்டில் சுண்ணாம்பு சத்து, மெக்னீசியம், இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின், வைட்டமின் சி என பல சத்துக்கள் நிறைந்துள்ளன.
???? இரத்தத்தில் சிவப்பணுக்கள் அதிகரிக்க வேண்டுமானால் பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக உண்ண வேண்டும். மேலும் பல்வலி, தலைவலி போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட பீட்ரூட் ஜூஸ் பருகி வரலாம். இயற்கையாகவே பீட்ரூட் இரத்தம் தொடர்பான நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் உடையது. பீட்ரூட்டை சமைத்து உண்ணால், இரத்தசோகை பிரச்சனை ஏற்படாது.
???? தேங்காய் எண்ணையுடன் பீட்ரூட் சாறை கலந்து தீப்பட்ட காயத்தில் தொடர்ந்து பூசி வந்தால் தீக்காயம் விரைவில் குணமடையும். தீப்புண் கொப்புளமாகாமல் தவிர்க்கலாம்.
???? பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து பருகி வந்தால் சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும். மேலும் பீட்ரூட் சாற்றில் தேன் கலந்து பருகி வந்தால் அல்சர் விரைவில் குணமாகும். பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானக் கோளாறுகளை தீர்க்கும்.
???? பீட்ரூட்டை வேக வைத்த தண்ணீரில் வினிகரைக் கலந்து பொடுகு தொல்லை உள்ள இடத்திலும் மற்றும் ஆறாத புண்கள் மேல் தடவி வந்தால் குணமாகும்.
???? கல்லீரலில் ஏற்படும் கோளாறுகளுக்கும், பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கும் பீட்ரூட் மிகச் சிறந்த டானிக் ஆகும். பீட்ரூட்டை சமையல் செய்து சாப்பிட்டால், அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் குணமாகும்.
???? பல மாதங்களாக மலச்சிக்கலாலும், மூலம் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்களும் இரவு படுக்கப் போவதற்கு முன்பாக, பீட்ரூட் சாறை நீருடன் கலந்து அரை டம்ளர் அளவிற்கு அருந்தி வந்தால் குணமாகும்.
???? புற்றுநோயினால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் நோயாளிகளும், பீட்ரூட் ஜூஸ் தினமும் ஒரு டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயைக் குணமாக்கும் வல்லமையும் பீட்ரூட்டுக்கு உண்டு.
Thanks and regards
A s Govinda rajan
Kodambakkam Chennai 600024