சபரிமலை சீசனில் பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
சபரிமலை சீசனில் பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை தவிர்க்க, பின்வரும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்:
சென்னை எழும்பூர்-கொல்லம் செல்லும் வாராந்திர சிறபு ரெயில் (வண்டி எண்:06111) வருகிற நவம்பர் 14 முதல் ஜனவரி 16 வரை (வெள்ளிக்கிழமைகளில்) இரவு 11.55 மணிக்கு எழுபூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்,
மறுமார்க்கத்தில், கொல்லம் - சென்னை எழுப்பூர் செல்லும் வாராந்திர சிறபு ரெயில் (வண்டி எண்: 06112) வருகிற நவம்பர் 15 முதல் ஜனவரி 17 வரை (சனிக்கிழமைகளில்) மாலை 4.35 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 12 மணிக்கு சென்னை எழுப்பூர் வந்து சேரும்.
சென்னை சென்ட்ரல் - கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06113) வருகிற நவம்பர் 16 முதல் ஜனவரி 18 வரை (ஞாயிற்றுக்கிழமைகளில்) இரவு 11.20 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4.30 மணிக்கு சென்னை எழுப்பூர் வந்து சேரும்.
மறுமார்க்கத்தில், கொல்லம் - சென்னை சென்ட்ரல் செல்லும் வராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06114) வருகிற நவம்பர் 17 முதல் ஜனவரி 19 வரை (திங்கட்கிழமைகளில்) மாலை 4.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.
சென்னை சென்ட்ரல் - கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06117) வருகிற நவம்பர் 22 முதல் ஜனவரி 24 வரை (சனிக்கிழமைகளில்) இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், கொல்லம் - சென்னை சென்ட்ரல் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06118) வருகிற நவம்பர் 23 முதல் ஜனவரி 25 வரை (ஞாயிற்றுக்கிழமைகளில்) மாலை 4.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.
சென்னை சென்ட்ரல் - கொல்லம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06127) வருகிற நவம்பர் 20 முதல் ஜனவரி 22 வரை (வியாழக்கிழமைகளில்) இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில், கொல்லம் - சென்னை சென்ட்ரல் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06128) வருகிற நவம்பர் 21 முதல் ஜனவரி 23 வரை (வெள்ளிக்கிழமைகளில்) மாலை 4.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

இந்த வாராந்திர சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை மறுநாள் (04.11.2025) காலை 8 மணி முதல் தொடங்குகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.