சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் 9 அதிகாரிகள் மீது நடவடிக்கை: திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரிய தலைவர் தகவல்

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் 9 அதிகாரிகள் மீது நடவடிக்கை: திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரிய தலைவர் தகவல்

   


பத்தனம்திட்டா: கேரளா​வின் சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் உள்ள 2 துவார பால​கர் சிலைகளின் தங்க கவசங்​கள் கடந்த 2019-ல் செப்​பனிடப்​பட்​டன. அப்​போது அதிலிருந்து சுமார் 4 கிலோ தங்​கம் மாய​மானது பின்​னர் தெரிய​வந்​தது. இதுகுறித்து கேரள உயர் நீதி​மன்ற உத்​தர​வின் பேரில் சிறப்பு புல​னாய்வு குழு விசா​ரித்து வரு​கிறது.


இந்​நிலை​யில் திரு​வி​தாங்​கூர் தேவஸ்​வம் வாரி​ய தலை​வர் பி.எஸ்​.பிர​சாந்த் நேற்று கூறிய​தாவது: தங்​கம் மாய​மான விவ​காரத்​தில் தேவஸ்​வம் துணை ஆணை​யர் பி.​மு​ராரி பாபுவுக்கு எதி​ராக ஏற்​கெனவே நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. அவர் இதற்கு முன் சபரிமலை​யில் டிடிபி நிர்​வாக அதி​காரி​யாக இருந்​துள்​ளார். 9 அதி​காரி​களின் தவறுகளை விஜிலென்ஸ் கண்​டறிந்​துள்​ளது. முராரி பாபு மீது ஏற்​கெனவே நடவடிக்கை எடுத்​துள்​ளோம். மற்ற அதி​காரி​கள் மீதான நடவடிக்கை குறித்து அக்​டோபர் 14-ம் தேதி நடை​பெறும் டிடிபி கூட்​டத்​தில் முடிவு செய்​யப்​படும்.


டிடிபி செய​லா​ளர் ஜெயஸ்ரீ, செயல் அலுவலர் சுதீஷ், நிர்​வாக அதி​காரி ஸ்ரீகு​மார், முன்​னாள் திரு​வாபர ணம் ஆணை​யர் கே.எஸ்​.பைஜு உள்​ளிட்​டோர் மீது நவடிக்கை எடுக்​கப்பட உள்​ளது. தங்க கவசங்​களின் எடை குறைந்​திருப்​பதை பைஜுவுக்​குப் பிறகு வந்த அதி​காரி அறிந்​திருந்​தும் புகார் அளிக்க தவறி​விட்​டார்.


துவார​பால​கர் தங்க கவசங்​களை செப்​பனிடும் பொறுப்பை பெங்​களூரு தொழில​திபர் உன்​னிகிருஷ்ணன் போற்றி ஏற்​றிருந்த நிலை​யில், அந்த கவசங்​களை திரு​வாபரணம் ஆணை​யரின் மேற்​பார்​வை​யின் கீழ் ஒப்​படைக்க வேண்​டும் என தேவஸ்​வம் வாரி​யம் கடந்த 2019-ல் உத்​தர​விட்​டிருந்​தது. இருப்​பினும் இந்த உத்​தரவை டிடிபி செய​லா​ளர் ஜெய, தங்க கவசங்​களை போற்​றி​யிடம் ஒப்​படைக்​கலாம் என்று மட்டும் நிர்​வாக அதி​காரி மற்​றும் ஆணை​யரிடம் தெரி​வித்​தார். இது​போன்ற நடை​முறை குறை​பாடு​கள் ஏற்​பட்​டுள்​ளன.


இந்த விவ​காரத்​தில் தற்​போதைய தேவஸ்​வம் வாரி​யத்​துக்கு தொடர்​பில்​லை. எனினும் எங்​கள் மீது குற்​றம் சாட்​டப்​படு​கிறது. சட்​டப்​பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வர் வி.டி.சதீசன் பொறுப்​பற்ற வகை​யில் பேசக்​கூ​டாது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%