சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் வசூல் ரூ.80 லட்சம்

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் வசூல் ரூ.80 லட்சம்



தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் முதன்மையான கோவிலாக சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் உள்ளது.


இக்கோவிலுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து தங்களது வேண்டுதல்களை வைப்பர். அவ்வாறு வேண்டுதல்கள் நிறைவேறிய பின் தங்களது நேர்த்திக் கடனாக ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளி ஆகியவற்றை கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.


அதன்படி, நேற்று திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் விஎஸ்பி இளங்கோவன், கோவில் இணை ஆணையரும், செயல் அலுவலருமான சூரியநாராயணன், உதவி ஆணையர்கள் லட்சுமணன், சுரேஷ் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்களான பிச்சைமணி, ராஜசுகந்தி, லட்சுமணன் மற்றும்அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் முதன்மைக் கோவிலான சமயபுரம் மாரியம்மன் கோவில் மற்றும் உபகோவில்களின் நிரந்தர உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.


ரூ.80 லட்சம் வசூல்:


அதில் முதன்மைக் கோவிலான மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக 79 லட்சத்து 20 ஆயிரத்து 88 ரூபாய் ரொக்கமும், 1 கிலோ 180 கிராம் தங்கமும், 2 கிலோ 340 கிராம் வெள்ளியும், உபகோவில்களான ஆதிமாரியம்மன் கோவிலில் 2 லட்சத்து 87 ஆயிரத்து தொள்ளாயிரம் ரூபாய் ரொக்கம், உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோவிலில் 10 ஆயிரத்து 429 ரூபாய் ரொக்கம், போஜீஸ்வரர் கோவிலில் 7 ஆயிரத்து 105 ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவை பக்தர்களின் காணிக்கையாக கிடைத்ததாக திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்தது.


உண்டியல் திறப்பு பணியில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள், தனியார் செவிலியர் கல்லூரி மாணவியர்கள் ஈடுபட்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%