சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு அங்கன்வாடி மழலையர்களுக்கு புத்தகத் தொகுப்பு வழங்கப்பட்டது
Sep 13 2025
104
திசையன்விளை:
சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக, உருமன்குளம் பஞ்சாயத்து பெட்டைக் குளம் அங்கன்வாடியில் பயிலும் மழலையர்கள் 25 பேருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறார்களுக்கு பேனா, பென்சில், ரப்பர், ஸ்கட்டர், ஸ்கேல் மற்றும் வரைபட நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் அடங்கிய புத்தகத் தொகுப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் கல்லூரி முதல்வர் முனைவர் டி. லில்லி அவர்களின் வழிகாட்டுதலின்படி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் சு. பலவேச கிருஷ்ணன் அவர்களால் செய்யப்பட்டது. மேலும், வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் மு. சண்முகம், அலுவலகப் பணியாளர் கவிதா, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?