முதுகில் கோணிப்பை
கையில் தாடியுடன்
வயோதிகத்தை நிரப்பிய முகம்
நெற்றியில் விபூதி இடாத விரல் கோடுகள்
வியர்வைத் துளியை நிரப்பி விரல்களின் அழுத்தத்திற்கு ஏற்ப நீரை வெளியேற்றியது.
இவன் யார் எதற்காக அழைகின்றான்.
ஜன்னலை இறக்கியவாரு எட்டிப் பார்க்கின்றான் கண்ணன்.
என்ன வேண்டும் பா..
என அவனைப் பார்த்து கேட்க அவன் காலியான வாட்டர் பாட்டில் ஜூஸ் பாட்டில் ஏதாவது இருந்தால் தாங்க என கூறுகின்றான். அப்படியாக அவன் கேட்க இவனுக்கோ ஒரே பிரமிப்பாக இருந்தது. அவனுடைய தோற்றத்திற்கு அவன் காசு பணம் எதிர்பார்ப்பான் என்று நினைத்துக் கொண்டு இருந்தான்.ஆனால் அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை முதியவர யாருடைய பதிலை . எதற்காக பிளாஸ்டிக் பாட்டில் கேட்கின்றாய் என்று கேட்கின்றான் .பழைய பாட்டில்களை எல்லாம் சேகரித்து கொண்டு போய் எடைக்கு போட்டு காசு வாங்கிக் கொள்வேன் அதில் தான் எனது குடும்பத்தின் அன்றைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்கின்றேன் என கூறினான். இந்த தள்ளாத வயதில் அவனுடைய தன்னம்பிக்கை பார்த்து அவனிடம் இன்னும் பேச வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகின்றது .
கண்ணன் மாயனிடம்
எங்கிட்ட காலி பாட்டில் எல்லாம் இல்லப்பா நான் வேணா பத்து ரூபா பணம் தர வச்சுக்க என்று கூறுகின்றான். அதற்கு அவன் மறுத்து பணம் காசு வாங்குனா அது பிச்சை எடுக்கிற மாதிரி ஆயிடுங்க எனக்கு அதுல விருப்பம் இல்ல உழைச்சு சாப்பிடணும்னு நான் நினைக்கிறேன். அது மட்டும் இல்லாம நான் என்னோட வயது காலம் முதலே நான் வயல் வேலைக்கு போய் ஓடி ஆடி உழைச்ச உடம்பு சோம்பேறித்தனமாக காசு வாங்குவதற்கு மனசு இடம் கொடுக்க மாட்டேங்குதுங்க ஐயா என்று கூறுகின்றான்.
டிப்டாப்பாக ஆடை உடுத்திக் கொண்டு கைநீட்டி காசு வாங்கும் ஒரு சிலரின் நடுவே இவன் வித்தியாசமாக தெரிந்தான். அவனின் தன்னம்பிக்கை உழைத்துப் பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் . இவனது பேச்சுக்களால் கண்ணன் ஈர்க்கப்படுகின்றான் . இப்படி நான் ஒவ்வொரு பிளாஸ்டிக் பாட்டிலாக பொறுக்கிக் கொண்டு போய் சென்று விற்பது எனது வயிற்று போஜனத்திற்காக மட்டுமல்ல. நமது விவசாய பூமி சீரழிவதை தடுப்பதற்காகவும் தான். ஒரு நாட்டுப் பற்றுடன் நடந்து கொள்வதற்காகவே என்று சொல்வதைக் கேட்ட கண்ணன் ஒரு கணம் பிரமித்துப் போகின்றான். அவன் பேசுக்கும் சொல்லுக்கும் சம்பந்தமில்லை என்று நினைத்துக் கொண்டே கேட்கின்றான் . அவன் தனது பேச்சை தொடர்கின்றான்.ஆமாங்க சாமி இப்படி பாட்டில்கள் எல்லாம் உங்கள மாதிரி கார்ல போறவங்க அங்கேயே தூக்கி வீசிட்டு போயிடறாங்க அது மண்ணுக்குள்ள புதைந்து போயி மண்ணு தண்ணீரை உறிஞ்சாமல் மேலே எழுப்பிட்டு கிடக்குது. அதனால மண் மாசு விட்டு விளைச்சல் குறைவாகிறது விவசாயிகளுடன் கவலைக்கிடமா மாறியது அய்யா அது மட்டும் இல்லாம போற வர வாகனங்களுடைய சக்கரங்களில் அடிபட்டு விபத்து நடக்குது இந்த மாதிரியான காரணங்களை தவிர்ப்பதற்காகவே நான் இந்த வேலையை செஞ்சுட்டு வரேன் .இதுல எனக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைக்குது .எனக்கு தேவையான பணமும் கிடைக்கிறது என சொல்கின்றான் அவன்.
அவன் சொல்வதைக் கேட்டு மீண்டும் அவனிடம் நிறைய பேச வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகின்றது. காரை ஒரு ஓரமாக நிறுத்துகின்றான் அருகில் உள்ள பெட்டிக்கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கி குடித்துவிட்டு பாட்டிலை காலி செய்து கொண்டு அவனிடம் அந்த பாட்டிலை கொடுக்கின்றான் இருந்தும் அவனுடைய ஆர்வம் குறையவில்லை இவ்வளவு தெளிவாக பேசும் நபர் ஏதாவது ஒரு வேலைக்குச் சென்று பிழைக்கலாம் அல்லவா ஏன் இப்படி ரோட்டோரங்களில் பாட்டில் பொறுக்கிக் கொண்டு காரை நிறுத்தி அதில் உள்ள பாட்டிலை சேகரித்துக் கொண்டு இருக்கின்றன். என்ற கேள்வி அவனுக்கு எழுகின்றது.அவனுள் ஒளிந்து கொண்டிருந்த கேள்வி ஒரு மரத்தடியில் அவரை கூப்பிட்டு சிறிது நேரம் பேச தெளிவாகின்றான்.நீங் ஏதாவது வேலைக்கு போகலாம் இல்ல ஏன் இப்படி வந்து பாட்டிலை தூக்கி கஷ்டப்படுறீங்க என அந்த முதியவரை பார்த்து கேட்கின்றான் கண்ணன்.எனது இளவயது காலம் முதல் நான் உழைத்து தான் பிழைத்துக் கொண்டிருந்தேன் விவசாய வேலைக்கு சென்று களை எடுத்தல் உழவு ஓட்டுதல் போன்ற வேலைகளை எல்லாம் செய்து கொண்டிருந்தேன் இப்போதும் வயதாகிவிட்டது அதனால் அதை எல்லாம் செய்ய முடியவில்லை என்னால் அதனால என்னால முடிஞ்ச வேலையை செஞ்சுட்டு என் குடும்பத்தை பார்த்துட்டு இருக்குற எனக்கு ஒரு திருப்தி கிடைக்குது.
அது மட்டும் அல்ல வயசான காலத்துல இனி ஓரிடத்தில் இருந்து முழு நேரமாக வேலை செய்ய என்னால் முடியாது. என் மனதுக்கும் உடலுக்கும் ஒரு உறக்கமும் அமைதியும் தேவை. அது நான் நினைத்தபோது எடுத்துக் கொள்ளும் நேரமாக இருந்தால் நான் மிகுந்த உற்சாகத்துடன் இருப்பேன் ஆகவேதான் இந்த தொழிலை நான் செய்கின்றேன் என்கின்றார். விவசாய வேலை எல்லாம் முன்ன மாதிரி இல்லாம நாங்க இருக்கும்போதெல்லாம் மாடு கலப்ப அதுதான் இருந்தது இப்ப டேக்டர் வந்ததுக்கப்புறம். வேலை சீக்கிரமா சீக்கிரம் முடிவதை தான் பார்க்கிறாங்க .எங்க மாதிரியான வயசானவங்கள யார் வேலை கொடுக்கிறாங்க. அப்படி இருக்கும்போது வேலை கிடைப்பது மிகவும் கடினமான ஒன்றாகவே இருக்கின்றது என்று கூறுகின்றான் அவன் பேச்சில் இருந்த உண்மை இவனை தெளிவடையச் செய்கின்றது. ஒரு பிச்சைக்காரன் என்று எண்ணிய இவன் ஒரு ஞானியாகத் தெரிந்தான் .காரை எடுத்துக் கொண்டு வேகமாக
தன் கிராமத்தை நோக்கி கிளம்பினான். விவசாய பூமியை விற்றுவிட்டு நகரத்தில் இடம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்று இருந்த அவனின் எண்ணம் அடியே ஒழித்தது. கிராமத்தில் விவசாயம் செய்ய வேண்டும் தரமான விவசாயமும் தகுதியான ஆட்களையும் நியமிக்க வேண்டும் என முடிவு செய்கின்றான்.அதற்கு ஏர் கலப்பை போன்ற பழைய சாதனங்களை வைத்து மருந்தில்லா இயற்கை விவசாய முறையில் விவசாயம் செய்கின்றான்.அதன் விளைவாக இப்பொழுது அவன் ஒரு பெரிய இயற்கை அங்காடி வைத்து அதில் வயது முதிர்நத விவசாயிகளை பணியில் அமர்த்தி வரும் வாடிக்கையாளர்களிடம் விவசாயம் பற்றியும் இயற்கை விவசாயம் எவ்வளவு உகந்தது என்பதை பற்றியும் கருத்துக்களை கூறச் செய்தது தனது விவசாயத்தை எப
பெருக்கினேன் .
"இயற்கையை போற்றுவோம்.. இயற்கை விவசாயத்தை வரவேற்போம்... அழிவில்லாத விவசாய பூமியை மீட்டுக் கொணர்வோம்..."
"உணவு அருந்தியவுடன்
எடுத்து எறியப்படும் இலைகூட..
ஒரு ஜீவனுக்கு உயிர் கொடுக்கும்.
ஒருவர் தேவை இல்லை என்று நினைப்பவர் கூட
ஒரு நேரம் தேவைப்படுவர்.
எனவே யாரையும் உதாசீனப்படுத்தாதீர்..."
உங்கள்
முனைவர் நா.மோகன செல்வி மனோகரன் கோபிசெட்டிபாளையம்
ஈரோடு மாவட்டம்.